ஜனாதிபதியின் சீனப் பயணம்
ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுக்கு 2025, ஜனவரி 14 முதல் 17 வரையில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், சீனப் பிரதமர் லீ சியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிலைக்குழுவின் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதியின், சீன மக்கள் குடியரசிற்கான இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment