தீயை கட்டுப்படுத்த சிறைக்கைதிகள் களமிறக்கம் - உயிரிழப்புகள் அதிகரிக்குமென அஞ்சுகிறேன் - பைடன்
லொஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெண்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை லொஸ் ஏஞ்சலிஸில் 37 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புகள் தீக்கிரையாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் 11 பேர் உயிரிழந்ததுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கட்டடங்களும் தீக்கிரையாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment