சுற்றுலா சென்ற இஸ்ரேலிய சிப்பாயை, தடுத்துவைக்க பிரேசிலின் நீதிமன்றம் உத்தரவு
ஹிந்த் ரஜப் அறக்கட்டளையின் (Hind Rajab Foundation) புகாரைத் தொடர்ந்து காஸாவில் போர்க்குற்றம் புரிந்ததாக அந்த ராணுவ வீரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்களில் வீடியோக்கள், புவிஇருப்பிட தரவுகள் மற்றும் சந்தேக நபர் தனிப்பட்ட முறையில் வெடிமருந்துகளை நடுவதைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் காசாவின் முழு சுற்றுப்புறங்களையும் அழிப்பதில் பங்கேற்பதைக் காட்டுகிறது.
சிப்பாயை விசாரிக்க பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து "இம்மா ஆரா" குழுவைச் சேர்ந்த தாய்மார்கள் பிரதமர் மற்றும் தலைமை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
சர்வதேச நீதிமன்றங்களின் அச்சுறுத்தலில் இருந்து குற்றவாளிகளைப் பாதுகாக்க தெளிவான கொள்கையை ஸ்தாபிக்க வலியுறுத்தி, ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் சட்டரீதியான இடர்பாடுகளை நீக்குவதில் பிரதமரின் பொறுப்புக்கு அம்மக்கள் தங்கள் கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.
Post a Comment