Header Ads



குளிர்பான போத்தலில் இருந்த, மண்ணெண்ணெய்யை அருந்திய குழந்தை உயிரிழப்பு


யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில், குளிர்பான போத்தலில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய்யை அருந்திய குழந்தை ஒன்று உயிரிழந்தது.


சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை ஒன்றே உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


தாய் சமையலறையிலிருந்த சந்தர்ப்பத்தில், மண்ணெண்ணெய் போத்தலுடன் விளையாடிய குழந்தை அதனை அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.