திரும்பவும் பல்டியா..?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த நிமல் லான்சா, கடந்த 2022ஆம் ஆண்டின் பின்னர் அக்கட்சியில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய முன்னணி என்ற பெயரில் களம் அரசியலில் களம் இறங்கினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த இவர்கள், பொதுத் தேர்தலிலும் ரணிலின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டிருந்தனர்.
எனினும் போட்டியிட்ட எல்லா இடங்களிலும் (களுத்துறையில் ரோஹித அபேகுணவர்த்தன தவிர) இவர்களது அணியில் யாரும் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் தற்போது மீண்டும் மொட்டுக் கட்சியுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து நிமல் லான்சா தரப்பு கலந்தாலோசனை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக நிமல் லான்சா தலைமையிலான அணி மீண்டும் மொட்டுக் கட்சியில் இணையும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment