Header Ads



உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டுகளின் 2025 இன் பட்டியல் விபரம்


உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டுக்களின் காலாண்டு தரவரிசையில் சிங்கப்பூர் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.


ஹென்லி கடவுசீட்டு இண்டெக்ஸ் 2025 வெளியிட்ட அறிக்கையின்அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


உலகெங்கிலும் உள்ள 227 இடங்களில் 195 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை சிங்கப்பூர் கடவுசீட்டு பெற்றுக்கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


இதில் ஜப்பான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதுடன் 193 இடங்களுக்கு பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை 3வது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் கடவுசீட்டுகளை பயன்படுத்தி 192 நாடுகளுக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.


தரவரிசையில் நான்காவது இடத்தில் ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இருப்பதுடன் 191 இடங்களுக்கு விசா இல்லாத அணுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.


1. சிங்கப்பூர் (195 இடங்கள்)


2. ஜப்பான் (193)


3. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து, தென் கொரியா (192)


இலங்கையின் கடவுச்சீட்டு


4. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே (191)


5. பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் (190)


6. கிரீஸ், ஆஸ்திரேலியா (189)


7. கனடா, போலந்து, மால்டா (188)


8. ஹங்கேரி, செக்கியா (187)


9. எஸ்டோனியா, அமெரிக்கா (186)


10. லிதுவேனியா, லாட்வியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (185)


இதில் இலங்கையின் கடவுச்சீட்டு 96ஆவது இடத்தினையும், 44 இடங்களுக்கு வீசா இன்றிய பயணத்தை மேற்கொள்ளாம் எனவும் தரப்படுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.