சபாநாயகரின் அறிவிப்பை பார்ப்போம், இந்த நேரத்தில் நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் அதன் கதி என்ன என்பதை நாம் இருமுறை சிந்திக்க வேண்டும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிக்கு கருத்து வௌியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"பாராளுமன்றில் எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருபவர்கள் சிந்திக்க வேண்டும்... எதற்காக இதனை கொண்டு வருகிறோம் என்று, எனவே சபாநாயகருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் பிரச்சினை இல்லை. சபாநாயகரின் அறிவிப்பை பார்ப்போம். இந்த நேரத்தில் நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. அதைப் பற்றி தனித்தனியாகப் பேசலாம்."
Post a Comment