Header Ads



மைத்திரிபாலவிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது - நீதிபதி திட்டவட்டம்


உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்புக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை விரைவில் தள்ளுபடி செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


நீர்கொழும்பு மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கரவினால் குறித்த உத்தரவு நேற்று(11.12.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோரின் கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.


கட்டுவா பிட்டிய குண்டுத் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த முறைப்பாடு 182ஆம் இலக்க சட்டத்திற்கு அமைய இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.