தற்போது L போர்ட் நிர்வாகமே இருக்கிறது, தேர்தலில் உத்வேகம் குறைவு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் - ரணில்
பொதுத் தேர்தலுக்கான உத்வேகம் குறைவாகவே காணப்படுவதாகவும், அது நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக் கூடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று-14- வாக்களிக்கும் போது, வாக்குப்பதிவு குறைவாக இருக்கும் என கணித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
"குறைந்த வாக்குப்பதிவு உள்ளதாகவும், அது எந்தக் கட்சியையும் பாதிக்கும் என்பதால் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது," என்று விக்கிரமசிங்க வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
"எம்மிடம் ஏற்கனவே 'எல் போர்ட்' நிர்வாகமே இருக்கிறது , எனவே சட்டம் ஒரே மாதிரியாக இருக்கக்கூடாது," என்று அவர் மேலும் கூறினார்.
Post a Comment