Header Ads



முஸ்லிம்கள் - விஜித்த சந்திப்பு, அததெரண வெளியிட்டுள்ள தகவல்


- அததெரண -


அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (22) இடம்பெற்றது.


அங்கு கருத்து வௌியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.


நாங்கள் ஜாதி அடிப்படையில் அமைச்சரவை அமைச்சு ஒன்றை கேட்கவில்லை எனவும் தங்களது பிரச்சினையை அமைச்சரவையில் தெரிவிக்கும் போது அதை புரிந்துகொள்ள அங்கு யாரும் இருக்க மாட்டார்களே என முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் இதன்போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.


அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்... "அப்படி கேட்காதீர்கள், அது தவறு...2004இல் நான் அமைச்சரவை அமைச்சர். இஸ்லாமிய மகளிர் அணியும் ஹிஜாப்பிற்காக துணி வழங்க வேண்டுமென அமைச்சரவையில் யோசனை முன் வைத்தேன். அதை முஸ்லிம் அமைச்சர்கள் செய்யவில்லை, நான்தான் செய்தேன்"


"நாம் அப்படி இல்லை. இவற்றை செய்தவதற்கு முஸ்லிம் அமைச்சர் தேவை இல்லை. மறுபுறம் உங்களுடன் பேசுவதற்கு அம்பாறையில் இருந்து எங்களுக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட வரவில்லை. ஆனால் ஆதம் பாவாவை தேசிய பட்டியலிலிருந்து நியமித்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் இல்லை என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். தேவையான இடங்களில் தேவையானவர்களை நியமித்துள்ளோம்" என்றார்.


අමාත්‍ය විජිත හේරත් සහ මුස්ලිම් ජනතාව අතර හමුක් ඊයේ (22) සිදුව තිබේ.

ඒ අකුරණ ප්‍රදේශයේදීය.

එහිදි අමාත්‍යවරයා පැවසුවේ මුස්ලිම් ජනතාවට කිසිදු අසාධාරණයක් වීමට ඉඩ නොතබන බවය.

මුස්ලිම් ප්‍රජාව නියෝජනය කරන අයෙක්  - අපි කැබිනට් මිනිස්ට්‍රි එකක් ඉල්ලන්නේ ජාති භේදයෙන් නෙමෙයි

ඇමති විජිත හේරත් - "එහෙම ඉල්ලන්න එපා. ඒක වැරදියි."

මුස්ලිම් ප්‍රජාව නියෝජනය කරන අයෙක් -  අපේ ආගමේ මොනවා හරි ප්‍රශ්නයක් ආවොත් එහෙම කැබිනට් එක දානවා. එතකොට තේරුම් ගන්න කවුරුත් නැහැ සර් ?

ඇමති විජිත හේරත් - "නැහැ වැරදියිනේ. 2004 මම කැබිනට් ඇමති. එතකොට මුස්ලිම් දරුවන්ගේ හිජාබ් එකට රෙදි කෑල්ල දෙන්න ඕනේ කියලා කැබිනට් පත්‍රිකාව දැම්මේ සිංහල මමනේ. මුස්ලිම් ඇමති කෙනෙක් නෙවෙයිනේ."

එහෙම නෑ අපි. එතකොට මුස්ලිම් කෙනෙක්ම ඉන්න ඕන නැහැ. අනිත් පැත්තට ඔයාලා කතා කරන්න අම්පාරේ අපිට මුස්ලිම් මන්ත්‍රිකෙනෙක් ආවේ නැහැ. හැබැයි අපි ජාතික ලැයිස්තුවෙන් ආදම් බාවා පත්කළා. ඕක ඔහොමම හිතන එක තමයි යන්නේ අතනට. බස්නාහිර පළාතේ ගවනර්, මුස්ලිම් කෙනෙක් පත්කළේ. දැන් මේ ඇමති කෙනෙක් නෑ කියලා ඒකේ එල්ලෙන්න එපා. අපි ඒ ඕන අය ඕන තැන්වලට පත්කරලා තිබෙනවා."

No comments

Powered by Blogger.