Header Ads



சவூதி - ஈரான் உறவுகளில் முக்கிய திருப்பமா..?


சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோருக்கிடையில் இன்று, ஞாயிற்றுக்கிழமை (10) தொலைபேசி உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.


சவூதி இளவரசருடனான தனது ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி அழைப்பில் அதிபர் மசூத் பெசெஷ்கியன்,


அரபு-இஸ்லாமிய அசாதாரண உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு மன்னர் சல்மான் விடுத்த அழைப்பை ஏற்க முடியவில்லை என்றும், துணை அதிபர் முகமது ரெசா அரேஃப் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் கூறினார்.  


'நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை; இந்த சந்திப்பு சியோனிச ஆட்சியின் குற்றங்கள் மற்றும் காசா மற்றும் லெபனானில் போர் மற்றும் இரத்தக்களரியை நிறுத்துவதற்கு சில பயனுள்ள மற்றும் உறுதியான முடிவுகளைக் கொண்டிருக்கும்' என்று ஈரான் ஜனாதிபதி இதன்போது கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான உறவுகள் வரலாற்று புள்ளியில் உள்ளன என்று சவுதி இளவரசர் கூறியதாகவும் சர்வதேச  ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.


சவூதியின் ஆயுதப் படைகளின் தலைவரும் இன்று (10) ஈரானுக்கு விஜயம் செய்துள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

No comments

Powered by Blogger.