ஷஹீதுடைய அந்தஸ்த்தைப் பெற்ற, 4 மத்ரஸா மாணவர்களின் விபரம்
- ULM. RIYAS -
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக காரைதீவு பொலிஸ் பிரிவிக்குட்பட காரைதீவு சம்மாந்துறை பிரதான வீதி மாவடிப்பள்ளி பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பாதையை உளவு இயந்திரத்தில் பயணித்தவர்களின் உளவு இயந்திரம் வெள்ள நீரில் குடைசாய்ந்ததில் இதில் பயணித்தவர்கள் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். நிந்தவூர் காசிபியூல் உளூம் அரபிக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் உட்பட இன்னும் சில பொதுமக்களும் காணாமல் போயுள்ளனர்.
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படடவர்களை தேடும்பணிகளில் கடற்படை, விசேட அதிரடிப்படை, மற்றும் இராணுவத்தினருடன் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இன்று இரவு 7:00 மணிவரை நான்கு ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்ப்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளன
இதில் சம்மாந்துறை மலையடிக்கிராமத்தை சேர்ந்த
15 வயது பாரூக் முகம்மது நாஸிக்
16 வயது முஹம்மது சாஜின் ,
வயது 16 ஆசிக் முகம்மது அப்னான்
வயது 15, முஹம்மட் பாறூக் சர்ஹான்
ஆகிய மதரசா மாணவர்களின் ஜனாசாக்கள் மீட்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர், மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ஹனீபா, மற்றும் முப்படையினரின் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கள நிலவரங்களை பார்வையிட்டனர் மீட்ப்புப் பணிகளுக்கு தேவையான சகல விடயங்களையும் துரிதமாக முன்னெடுக்குமாறும் மீட்ப்புப் பணியாளர்களை வேண்டிக்கொண்டனர்.
தற்போது இம்மாவட்டத்தில் மழை ஓய்ந்தாலும் சீரற்ற காலநிலையே நிலவுகின்றது.
Post a Comment