சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்-2024
இதனை முன்னிட்டு இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு கொழும்பு 07 இல் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் பிற்பகல் 04.00 மணி முதல் இடம்பெறும். இந்நிகழ்வில், கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய "பலஸ்தீனம்" நூல் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், இலங்கை பலஸ்தீன்
ஒருமைப்பாட்டு இயக்கத்தின் தலைவரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க வழவேற்புரை நிகழ்த்துவார். இந்நிகழ்வில்
இலங்கைக்கான பலஸ்தீன தூதரக பதில் தூதுவர் ஹிஷாம் அபு தாஹா, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ விஜித ஹேரத்,
இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி Marc-Andre Franche, பேராதனை பல்கலைக்கழக மனித உரிமைகள் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம, பேராதனை பல்கலைக்கழக கலை பீட சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.
இலங்கை பலஸ்தீனம் ஒருமைப்பாட்டு இயக்கத்தின் பிரதித் தலைவர் ஹனா இப்றாஹிம் நன்றியுரை நிகழ்த்துவார்.
இந் நிகழ்வில் சகலரையும் கலந்து கொண்டு பலஸ்தீனு விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment