Header Ads



மீதமிருக்கும் ஹமாஸ் தலைவர்களும் அழிக்கப்படுவர், முழு பலத்துடன் இஸ்ரேல் பணியை தொடரும்


ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்  கொல்லப்பட்டது, ஹமாஸ் அமைப்பிற்கு வெறும் ஆரம்பம் மட்டுமே என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.


யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், தீய சக்திகள் பலத்த அடியை சந்தித்துள்ள போதிலும், தங்களுக்கு முன்னால் உள்ள பணி இன்னும் முழுமையடையவில்லை என்றும் நெதன்யாகு கூறியுள்ளார்.


சின்வாரின் கொலையை போரில் ஒரு முக்கிய தருணம் என்று அழைத்த நெதன்யாகு, காசாவில் வசிப்பவர்கள், இறுதியாக ஹமாஸின் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட இது ஒரு வாய்ப்பு என்றும் விவரித்துள்ளார்.


மேலும், குறித்த அறிக்கையில் மீதமிருக்கும் ஹமாஸின் தலைவர்களும் ஒழித்துக் கட்ட படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


இதேவேளை, இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பவர்கள், ஆயுதங்களை தூக்கி எரிந்து விட்டு அவர்களை திருப்பி அனுப்ப அழைப்பு விடுத்ததோடு, அவ்வாறு செய்பவர்கள் வெளியே சென்று வாழ அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்தும், சின்வாரை கொலை செய்த வீரர்களை பாராட்டிய அவர், காசாவில் இன்னும் பணயக்கைதிகளாக இருப்பவர்களின் குடும்பத்தினரிடம், “உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவரும் வீடு திரும்பும் வரை முழு பலத்துடன் இஸ்ரேல் பணியை தொடரும்” என வலியுறுத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.