ஷிஆக்கள் நோன்பு, மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை - அயதுல்லாஹ் காமேனி
- BBC -
ரமலான் நாட்களில் தொழுகைக்காக யாரும் கூட வேண்டாம் என செளதி அரேபியாவில் உள்ள பல மத குருக்கள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் அதிகமாக பரவக்கூடாது என்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களின் மசூதிகளை மூடியுள்ளனர். உலகின் மிக பெரிய மசூதியான செளதி அரேபியாவின் மக்காவும் மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காலப் பகுதியில் நோன்பு நோற்றல் பற்றிய ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனையி அவர்களின் இஸ்லாமிய தீர்ப்பு :
ReplyDeleteவினா: இன்றைய காலநிலையில் கொரோனா வைரஸ் பரவிஉ
யுள்ளமையினால் நோன்பு நோற்றல் என்ன சட்டம் ?
விடை:
நோன்பு என்பது இறைவனினால் அவனது அடியார்களுக்கு வழங்கப்பட்ட ஓர் அருட்கொடையும் கடமையுமாகும். மனித ஆத்மாவின் பரிணாம வளர்ச்சிக்கு உந்துகோலாக உள்ளது .இதற்கு முன் சென்ற சமூகத்திற்கும் கடமையாக்கப் பட்டிருந்தது.
நோன்பின் பிரதிபலனாக மமனிதனின் ஆன்மீகமும் , தனிமனித மற்றும் சமூக இறையச்சமும் , கஷ்டங்களுக்கு எதிரான சக்தியினையும் மனிதன் அடைகின்றான். நோன்பின் மூலம் மனிதனின் உடலும் பிரயோசனமடைகிறது என்பது தெளிவானதோர் விடயமாகும் . இறைவன் நோன்பாளிகளுக்கு மிகப்பெரும் கூலியினைக் கொண்டுள்ளான்.
நோன்பு மார்க்கத்தின் கடமைகளில் ஒன்றாகும். ரமழான் மாத நோன்பினை விடுதல் பாவகாரியமாகும்; அது ஆகுமான விடயமல்ல . ஆனால் , அறிவியல் ரீதியாக நோன்பு நோற்றல் நோயினை ஏற்படுத்தும் அல்லது நோயினை அதிகரிக்கச் செய்யும் அல்லது நோய் சுகமடையும் காலப் பகுதி அதிகமாகுமாக இருப்பின் நோன்பினை விட முடியும் ; இருப்பினும் பிறகு அதனை கழா செய்ய வேண்டும்.
இந்தக் காரணங்களை ஓர் மார்க்க ஞானமுள்ள தலைசிறந்த வைத்தியரின் கூற்ற போதுமானதாகும்.
எனவே , யார் ஒருவர் மேற்கூறப்பட்ட காரணங்களினால் பயமடைந்தால் அப்பயம் பகுத்தறிவினால் சரிகாணப்பட்டால் நோன்பினை விட்டு விட்டு பிறகு கழா செய்தல் அவசியமாகும் .
மதிப்புகுரிய அட்மின் அவர்களுக்கு,
ReplyDeleteஷPஆக்கள் நோன்பு மேற்கொள்ள அவசியமில்லை என தலைப்பிட்டு வெளியிட்டுள்ள செய்தியின் உண்மை வடிவம் இதுவாகும்.