கொரோனா ஒழிப்பில் இலங்கை முதன்மை, இடத்தில் இருப்பதாக கூறுவது பொய்
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதில் இலங்கையே உலகில் முதன்மை இடத்தில் இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அவுஸ்திரேலியாவில் இருக்கும் தமக்கு நெருக்கமானவர்களை பயன்படுத்தி அப்படியான அறிக்கையை தயாரித்து, உலகில் முதன்மை இடத்தில் இருப்பதாக கூற முயற்சித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் சம்பந்தமான உண்மையான தகவல்களை மறைத்து, யதார்த்த நிலைமையை வெளியிடாது அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
இப்படியான போலி அறிக்கைகளை தயார் செய்ய தகவல்களை வழங்குவது யார் என்பதை தான் கண்டுபிடித்துள்ளதாகவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Vietnam
ReplyDeleteConoravirus cases:268, Deaths:00,Recovered:201,Active cases:67,Serious/critical:08