Header Ads



ஹஜ் செல்ல 3 வகை கட்டணங்கள், முகவர்கள் அழைத்துச் செல்வர், மஹிந்த தலைமையில் தீர்மானம்

- இக்பால் அலி -

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,  ஹஜ் குழுவினர்கள் மற்றும் ஹஜ்  முகவர்களுக்கிடையே இன்று  -14- அலரிமாளிகைளில்  இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் முகவர் மூலமாக ஹஜ் கடiமையை நிறைவேற்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஹஜ் குழுவின் ஊடகப் பேச்சாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , ஹஜ் குழுவினர்கள், முகவர் சங்கங்களின் பிரநிதிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது இணக்கப்பாடு எட்டியுள்ளதாக ஹஜ் குழுவின் ஊடகப் பேச்சாளர் அப்துல் சத்தார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ,

இதன் போது ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதற்காக மூன்று வகையில் கட்டணம் அறவிடுவதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. முதலாவது கட்டணப் பொதி  ஒருவரிடம் இருந்து ரூபா 575000 என்ற வகையிலும் இரண்டாவது கட்டணப் பொதி ரூபா 650000 என்ற வகையிலும்  மூன்றாவது கட்டணப் பொதி ரூபா 750000 என்ற வகையிலும் கட்டணங்கள் அறவிடப்படவுள்ளன. 

ஹஜ் முகவர்கள் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலமாக வழக்கம் போன்று செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

14-02-2020

1 comment:

  1. இது வழமையாக வருடாவருடம் தனிப்பட்டவர்கள் செய்யும் சேவையுடன் ஒரு நல்ல வருமானம் தரும் வியாபாரம். இந்த வியாபாரம் பற்றி முன்னாள் வௌிநாட்டு அமைச்சர் ஏ.ஸீ.எஸ் ஹமீத் அவர்கள்' எந்தவிதமான முதலீடுகளும் இன்றி வெற்றிகரமாக நடைபெறும் நூற்றுக்கு நூறு இலாபம் தரும் வியாபாரம்'எனக் குறிப்பிட்டார்.சமூகத்தில் ஒரு சிறிய குழுவினர் செய்யும் இந்த வியாபாரம் பற்றி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் முன்னைய அரசாங்கங்களில் பதவியில் இருந்த மந்தி(ரி)கள் அல்லாஹ்வுக்காக கடமையை நிறைவேற்றச் செல்லும் ஹஜ் யாத்திரிகர்களிடம் பல்வேறு பெயர்களில் 25000- 75,000 வரை கொள்ளையடித்து தங்கள் பக்கட்களை நிரப்பினர். இந்த மங்கொள்ளை அல்லது பகற்கொள்ளை,பிறகு ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களையும் விட்டுவைக்கவில்லை. அந்த பகற்கொள்ளளைக்கு வாய்ப்புத் தேடும் நோக்கில், ஹாஜிகளுக்கான சேவை என்ற போர்வையில் கொள்ளையடிக்க எடுத்த முயற்சிதான் இந்த கலந்துரையாடல்களும்,ஹஜ்ஜாஜிகளுக்கான சேவை என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பகற்கொள்ளைக்கான பூர்வாங்க ஏற்பாடுகள். ஆனால், பல காரணங்களால் அந்த முயற்சி கைகூடவில்லை எனத் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.