Header Ads



முஸ்லிம் பயங்கரவாதம் தொடர்பில், நான் அறிவுரை வழங்கியிருந்தேன் - 34 பேர் சிரியாவுக்குச் சென்றனர்


அரசாங்க புலனாய்வு சேவை தனக்கு கீழ் இல்லாவிட்டாலும் தற்போதைய பணிப்பாளருக்கு, முஸ்லிம் பயங்கரவாதம் தொடர்பில், தான் அறிவுரை வழங்கியதாகவும் முன்னாள் பொலஸ்மா அதிபர் என்.கே. இழகக்கோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்று -25- வாக்குமூலம் வழங்கிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஐ.எஸ். அமைப்புடன் இணைந்துக்கொள்வதற்காக, 5 நபர்கள் தமது குடும்ப உறுப்பினர்கள் 34 பேருடன் சிரியாவுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் குறித்து பாதுகாப்பு சபையில் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.