முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு அநீதி - முஸ்லிம் அரசியல்வாதிகள் உடனடியாக தலையிட வேண்டும்..!
-தேசபந்து முஹம்மது சுல்தான் பரீத்-
முல்லைத்தீவு முஸ்லிம்களை புலிகள் 1990ம் ஆண்டு அவர்களது சொத்துக்களை அபகரித்து வாழ்விடத்தை விட்டும் துரத்தியது சர்வதேமும் அறிந்த உண்மை. தற்போது முஸ்லிம்களின் தொகை பண்மடங்கு அதிகரித்துள்ளது. காணி ஆணையாளர் நாயத்தினால 2013-1ம் இலக்க சுறறு நிரூபத்திற்கமைவாக கறைதுறைப்பற்று பிரதேச செயலாளரினால் விண்ணப்பம் கோரப்பட்டு பல காணிக்கச்சேரிகள் நடைபெற்றது.
ஆனால் காணிகள் வழங்கப்படவில்லை. முல்லைத்தீவு முஸ்லிம்கள் ஒரு புதிய கிராமமொன்றை சகல வசதிகளுடனும் செய்து தரும்படி அமைச்சர் றிஸாத் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அவரால் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைவாக அமைச்சர் மேற் கொண்ட நடவடிக்கைகளையும் தமிழ் அரசியல் வாதிகள் குழப்பியதாக நம்பப் படுகிறது.
மீளகுடியமர காணி போதாமை காரணமாக முல்லைத்தீவில் வாழாத முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.
இதே வேளை முஸ்விம்களிடமுள்ள காணி விபரங்களை அறியுமுகமாக சில தந்திரோபாயங்கள் மேற் கொள்ளப்பட்து. அதற்கமைவாக அரச பத்திரங்களையுடையவர்கள் தமது காணிகளை குறித்த திகதியினுள் வெட்டி துப்பரவு செய்யாவிட்டால் அதன் உரிமம் இரத்துச் செய்யப்படும் என கரைதுறைப் பற்று பிரதேச செயலகத்தால் அறிவிக்கப்பட்து. அதற்கமைவாக தமது காணிகளை 23 வருடங்களின் பின்பு துப்பரவு செய்தனர். இதனையே தமிழ் அரசியல்வாதிகள் காடழிப்பென கூறுகின்றனர்.
தமிழர்களும் இதை செய்துள்ளனர். 1990 இற்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த நகரப் பகுதிகளிலுள்ள குடியிருப்புக் காணிகளை புலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும், யாழ்பாணம், மட்டக்களப்பு போண்ற பிரதேச வாதிகளும் குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர். இக்காணிகள் முல்லைத்தீவு நகர் சுற்றுப்புறம், ஹிஜ்ராபுரம்,நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று.முத்தையன்கட்டு,உடுப்புக்குளம்,டகொத்தியாகுமபம் என பல கிராமங்களை சொல்லிக் கொண்டு போகலாம.
இவற்றுள் அரச உத்தரவுப் பதிரமுடைய காணிகும், உறுதிக்காணிகளும் அடக்கம். இவையணைத்தும் இனி முஸ்லிம்கள் முல்லைத்தீவுக்கு வரமுடியாது. புலிகள் ஆட்சியே இருக்குமென மிரட்டியே பெறப்பட்டுள்ளது. காணி வாங்கிய தமிழர்கள் பக்கத்து முஸ்லிம்களின் காணிகளிலும் ஒரு பகுதியை பிடித்து வை்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே முழுவரலாறும் எழுத முடியாத காரணத்தினால் ஒன்றை மடடும் ஜனாதிபதியின் கவனத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கொண்டு வரும்படி தயவாக கேட்டுக் கொள்கின்றேன். “1990ம் ஆண்டு புலிளினால் துரத்தப் பட்ட முஸ்லிம்களின் நிலை தொடர்பாக விசாரித்து நட்டஈடு செலுத்த பணித்துரைக்கவும், 1990ம் ஆண்டிற்குப் பின்னர் முஸ்லிம் மாற்று மதத்தவருக்கு விற்கப்பட்ட அணைத்து காணிகளின் பதிவுகளும் இரத்துச் செய்யப்பட ஆவண செய்யக்கூடிய ஆணைக்குழு ஒன்றை நியமிக்க ஆலோசனைகளையும்,அழுத்தங்களையும் கொடுக்க வேண்டுமென பணிவுடன் வேண்்டுகின்றேன”.
இதை முன்நின்று செயற்படுத்தும் தலைவர்களுக்கு அல்லாh அவனது அருட்கொடைகளை வழங்குவானாக. இவைதான் செய்யப்பட வேண்டியது தமிழ் மக்கள் சிலர் பிற பிரதேசங்களில் (மலைநாடு) இருந்து வந்து வடமாகாணத்தில் விடுதலைப்புலிகளால் அவர்களது ஆட்சிக்காலத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர் அதில் தப்பேதும் இல்லையாயில் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு அதன் பின்னல் அச்சம் காரணமாக தமது இடங்களை குறைந்த விலைக்கு விற்ற மக்களக்கு அவ்விடத்தில் அல்லது இதனை அண்மித்த அரச காணியில் குடியேற்றப்படுவது நியாயமே இதை நியாமமாகச் சிந்திக்கும் தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்கின்னறனர்
ReplyDelete