Header Ads



UNP டன் எந்த இணக்கப்பாடும் இல்லை, மகிந்தவை தடுக்க அனைத்தையும் மேற்கொள்வோம் - அனுரகுமார

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்வித இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுகோகொடையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், ஜே.வி.பியுடன் இணைந்து செயற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கடந்த வாரம் கூட அமைச்சரவையில் கூடியதாகவும், 17ம் திகதி தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாக குற்றம் சுமத்திய போதிலும் உண்மையில் அவரது சொந்தக் கட்சியே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 17ம் திகதியின் பின்னர் வலுவான ஓர் எதிர்க்கட்சியை உருவாக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதனை தடுக்க தம்மலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப் போவதாக அனுர குமார திஸாநாயக்க கூட்டத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

1 comment:

  1. ஐயா அனுர....
    கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதற்கு நீர்தானய்யா உதாரணம் எனவே எங்கள் முஸ்லிம் அரசியல் பச்சோந்திகளுக்கு ஒரு பிரத்தியேக வகுப்பு நடாத்தி கொஞ்சம் புத்தி சொல்லிக்கொடுக்க முடியுமா (விசேடமாக எங்கள் சமூகத்தை அடைமானம் வைத்து பிளைப்பு டாத்தும் கண்டி நாநா ஹக்கீமுக்கு)

    ReplyDelete

Powered by Blogger.