'முஹம்மது நபியை கார்ட்டூனாக வெளியிட்ட பத்திரிகை' - விசாரணை அதிகாரி தற்கொலை
சார்லி ஹெப்டோ பத்திரிக்கை தாக்குதலை விசாரித்து வந்த அதிகாரி ஹெல்ரிக் ஃப்ரைடோ தற்கொலை செய்து கொண்டதாக தற்போது செய்தி வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட அன்று துப்பாக்கிச் சூட்டில் இறந்த குடும்பத்தவர்களில் ஒரு குடும்பத்தவரோடு விசாரணை நடத்தி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் உண்மையான சூத்திதாரிகள் யார் என்பதன் அறிக்கையை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே இந்த நிகழ்வு நடந்துள்ளது. அவருடைய சொந்த துப்பாக்கியால் தலையில் சுட்டு இறந்துள்ளதாக அறிக்கை சொல்கிறது.
இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அரசு தரப்பில் வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அனால் இது நம்பும்படி இல்லை.
இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது துப்பாக்கி சூட்டின் உண்மை குற்றவாளிகளை கண்டு பிடித்ததால் எதிரிகள் அவரது துப்பாக்கியினால் சுட்டுக் கொன்றார்களா?
அல்லது ஒட்டு மொத்த உலகமும் முஸ்லிம்களை குறை சொல்லிக் கொண்டிருக்கும் போது அதற்கு நேர் மாறாக இந்த துப்பாக்கிச் சூட்டின் சூத்திதாரிகள் வேறு நபர்கள் என்ற உண்மை தெரிந்து மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா?
இவரது தற்கொலையை ஃப்ரான்ஸ் இத்தனை நாள் மூடி மறைத்தது ஏன்? யாரைக் காப்பாற்ற இந்த நாடகம்?
பத்திரிக்கை சுதந்திரம் என்று வாய் கிழிய பேசுபவர்கள் இந்த கொலையை மூடி மறைத்ததை பற்றி வாய் திறக்காதது ஏன்?
பத்திரிக்கை அலுவலம் தாக்கப்பட்டு முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்பட்டதால் பலனடைந்த சமூகம் யார்?
இது பற்றி ஃப்ரான்ஸ் அரசாங்கம் திறந்த மனதோடு விசாரணையை முடுக்கி விடுமா?
எப்படியோ உலக மக்களின் பெரும்பான்மை கூட்டு மனசாட்சியின் படி குற்றவாளிகளாக முஸ்லிம்களும் இஸ்லாமும் சித்தரிக்கப்பட்டு விட்டது. இப்படித்தான் அப்சல் குருவை தூக்கில் போடும் போது நீதிபதி சொன்னார். :-) குற்றம் செய்தவர்கள் ஹாய்யாக வீதிகளில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.
மற்றவர்களுக்கு ஒரு நீதி: இஸ்லாமியர்களுக்கு கூட்டு மனசாட்சியின் படி நீதி என்பது இந்தியாவையும் தாண்டி உலகமனைத்திற்கும் இது பொது விதியாக்கப்பட்டு விட்டது. நீதித் துறையின் லட்சணம் இதுதான்.
தகவல் உதவி
சுவனப் பிரியன் at 7:42 AM
குற்றச் செயலைக் கருத்தில் கொள்ளாது, அதற்குரியவர்களை, பின்னணியில் இயங்குபவர்களை, அவர்களின் நோக்கங்களைக் கண்டறியாது, இஸலாம் மதச் சாயத்தைப் பூசி நடத்தப்படும் விசாரணைகளில் மூலம் உண்மையைக் கண்டறிய முடியாது!
ReplyDeleteஇம்மனோ நிலை மாறாத வரை குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, மறைந்து கொள்ளும் பதாகையாகவும், சந்தேகம் ஏற்படாமல், தேடலில்லாமல் செய்யப்படுவதற்கான உந்து கோலாகவும, ஊக்குவிப்பாகவும் அமையும்! முடிவு பயங்கரமாகவே இருக்கும்!