Header Ads



மியன்மார் முஸ்லிம்களுக்கு எற்பட்ட கதி இலங்கை முஸ்லிம்களுக்கும் ஏற்படுமா (பகுதி 3)



(அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் றிஸ்வி முப்தி www.jaffnamuslim.com ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலே இது)

7) பௌத்த இனவாத நெருக்கடிகளை எதிர்கொள்ள ஜம்இய்யத்துல் உலமாவிடம் என்ன திட்டங்கள் உள்ளன? 

சக வாழ்வையும் மனித நேயத்தையும் பரப்பவதும் கட்டியெழுப்புவதும்தான் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் உள்ள திட்டமாகும். இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் எப்படி நடந்து கொள்ளவெண்டுமென அழகிய முறையில் வழிகாட்டியிருக்கிறது. எங்களுக்கு தீங்கிழைப்போருடன் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதை புனித அல்குர்ஆன் பின்வருமாறு சொல்கிறது.

(நபியே ) நீர் மனிதர்களை விவேகத்தைக் கொண்டும் மற்றும் அழகான நல்லுபதேச்ததைக் கொண்டும் உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக.அன்றியும் எது மிக அழகானதோ அதைக் கொண்டு அவர்களுடன் விவாதம் செய்வீராக நிச்சயமாக உமதிரட்சகன் அவனுடைய வழியிலிருந்து தவறியவரை மிக்க அறிந்தவன்.இன்னும் நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக்க அறிந்தவன்;. (அந்நஹ்ல் 16)

நன்மையும் தீமையும் சமமாகி விடாது (ஆதலால் நபியே) எது மிக அழகானதா அதைக் கொண்டு (தீமையை) தடுத்துக் கொள்வீராக அப்பொழுது எவருக்கும் உமக்ககுமிடையே பகைமை இருந்ததோ அவர் உன்னுடைய உற்ற சிநேகிதரைப் போன்றாகிவிடுவார். (ஹாமீம் ஸஜ்தா 34)

அல் குர்ஆனுடைய இந்த வழிகாட்டலின் பிரகாரமே றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்துப் பிரச்சினைகளையும் விரோதங்களையும் முன்னோக்கினார்கள். அல் குர்ஆனின்; மேற்படி வழிகாட்டலுக்கு வாழ்க்கை ரூபம் கொடுத்தார்கள். அதனால்தான் நபியவர்களைக் கொலை செய்ய முழு மூச்சாகப் பாடுபட்ட சப்வான் பின் உமய்யா நபியவர்களின் உயிர்த்தோழனாக மாறினார்கள். உலகில் எனக்கு மிக வெறுப்பான ஒரு முகம் இருக்குமென்றால் அது முஹம்மதுடைய முகமாகத்தான் இருக்கும் என்று கூறிய தமாமா இப்னு உஸால் உலகின் மிக விரும்பமான முகம் இருக்குமென்றால் அது உங்களுடையதுதான் யா றஸுலுல்லாஹ் என்று கூறி நபியவர்களிடம் சரணடைந்தார்கள். நபியவர்களை சூனியக்காரன், பைத்தியக்காரன் என்றெல்லாம் வசைபாடித்திரிந்த ஹின்து பின்து உத்பா நபியவர்களை உயிருக்குயிராக நேசிக்குமளவு மாறிவிடுகிறார்கள்.

இதுபோன்று ஆயிரமாயிரம் சம்பவங்களை நபியவர்களின் வாழ்வில் எடுத்துச் சொல்லலாம். எனவே நாமும் அவ்வழியைப் பின் பற்றும்போது நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி வரும். 

8)இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இனவாத செயற்பாடுகள் குறைவடையுமென எதிர்பார்க்கிறீர்களா?

இஸ்லாத்துக்கும் முஸ்லிக்கும்களுக்கும் எதிரான நடவடிக்கைகள் செயற்பாடுகள் இன்று நேற்று ஆரம்பமானவையல்ல. நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் எமக்கு வரக்கூடிய அனைத்து பிரச்சினைகளையும் குர்ஆ ஸுன்னாவுடைய ஒழியில் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய கடமைப்பாட்டுடனுள்ளோம். 

இன்று பன்றியை அறுத்து அதனது மாமிசத்தையும் குடலையும் மஸ்ஜிதில் வீசுகிறார்கள். ஆனால் நபியவர்களுடைய வாழ்வைப் பார்க்கும்போது ஒட்டகத்தை அறுத்து அல்லாஹுதஆலாவுக்கு மிக விருப்பமான இடமாகிய கஃபதுல்லாஹ்வில் நபியவர்கள் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான செயலாகிய ஸுஜுதில் இருக்கும்போது அவர்களது கழுத்திலேபோட்டார்கள். தான் தொழதுகொள்வதற்காக அபூபக்;ர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது வீட்டில் ஏற்பாடு செய்திருந்த இடத்தையும் தடுத்து நிறுத்தினார்கள்.

அல்லாஹ்வுடைய மஸ்ஜித்களில் அவனுடைய (சங்கையான) பெயர் அவற்றில் கூறப்படுவதைத் தடுத்து அவைகளைப் பாழாக்க முயற்சிப்பதைவிட மகா அநியாயக்காரான் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களாகவேயன்றி அவைகளில் நுழைய அவர்களுக்குத் தகுதியில்லை. (அவைகளில் அல்லாஹ்வின் பெயர் கூறப்படுவதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முற்படும்) அவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு மறுமையிலோ அவர்களுக்கு மகத்தான வேதனையுண்டு (அல் பகறா 114)

இதுபோன்று நபியவர்களின் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகள் ஆனாலும் நபியவர்கள் அத்தீமைகளை தீமைகளைக் கொண்டு தடுக்காமல் அல் குர்ஆன் கூறும் பிரகாரம் நன்மைகைளைக் கொண்டே தடுத்தார்கள். எனவே நாம் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இனவாத செயற்பாடுகள் குறைவடையுமென எதிர்பார்ப்பதைத் தவிர்த்து அவற்றை எவ்வாறு அழகிய முறையில் நபிவிழியில் முன்னோக்கி இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கு சாதகமானதாக அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்பதையே சிந்திக்க் வேண்டும். 

9) மியன்மார் முஸ்லிம்களுக்கு எற்பட்ட கதி இலங்கை முஸ்லிம்களுக்கும் ஏற்படலாமென்றும் சிலர் கூறுகின்றனர், அதற்கான செயற்பாடுகளை அங்கீகரிக்கிறிர்களா?

இன்ஷா அல்லாஹ் அப்படியொரு நிகழ்வு நடைபெற அல்லாஹ் ஒருபோதும் விடமாட்டேன் என்ற உறுதியான நம்பிக்கை அல்லாஹ்வின் மீது இருக்கிறது. மியன்மார் முஸ்லிம்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்குமிடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. பூர்வீகத் தன்மை, கல்வி,கலாசாரம், மாற்றுமத சகோதரர்களுடனான நட்பு, இஸ்லாம் வரும் முன்னரே இலங்கைக்கும் அரபுலகத்துக்குமிடையிலான தொடர்புகள், என்று பல்வேறு வித்தியாசங்களை வகைப்படுத்தலாம். இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் வராலாற்றில் பார்க்கும் போது மிகக் குறைவாகவே நடந்திருக்கிறது. இப்பொழுதுதான் தொடர்ந்தேச்சையான எதிர்ப்புக்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. 

நன்மையும் தீமையும் சமமாகி விடாது(ஆதலால் நபியே)எது மிக அழகானதா அதைக் கொண்டு (தீமையை) தடுத்துக் கொள்வீராகஅப்பொழுது எவருக்கும் உமக்கிமிடையே பகைமை இருந்ததோ அவர் உன்னுடைய உற்;ற சிநேகிதரைப் போன்றாகிவிடுவார். (ஹாமீம் ஸஜ்தா 34)

என்ற திருவசனத்தை நாம் வாழ்வில் அமுல் செய்யும்போது நிலமைகள் சீராகி விடும். றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில் சமூக வாழ்வில் எத்தனையோ நோவினைகளுக்கு உள்ளானார்கள். நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது, ஓட்டகக் குடல் கழுத்தில் போடப்பட்டது, அவர்களது பல் ஷஹீதாக்கப்பட்டது, பிறந்த ஊரை விட்டுவிரட்டியடிக்கப்பட்டார்கள், நபியவர்ளையும் முஸ்லிம்களையும்மக்கத்து வாழ்வில் ஒதுக்கிவைத்தார்கள், முஸ்லிம்களுடைய பொருளாதாரம் சூறையாடப்பட்டது, இப்படியாக இன்னோரன்ன நோவினைகளைச் சந்தித்திருக்கிறார்கள். 

பின்வரும் நபிமொழி நபியவர்கள் தன் வாழ்வில் முன்னோக்கிய துன்பங்களை எங்களுக்குப் படம்பிடித்துக் காட்ட போதுமானது 'நிச்சயமாக நான் வேறெவரும் துன்பப்படுத்தப்படாத அளவு அல்லாஹ்வுடைய விடயத்தில் துன்பப்படுத்தப்பட்டிருக்கிறேன்'

இன்று முழு உலகையும் பார்க்கும்போது முஸ்லிம்கள் ஏதோஒரு விதத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொல்லவில்லை முழு உலக முஸ்லிம்களுக்கும் நான் இதனையே சொல்கிறேன். 

http://www.jaffnamuslim.com/2013/08/1.html  Part 1

http://www.jaffnamuslim.com/2013/08/2.html  Part 2


1 comment:

  1. why u r thinking un wanted problem u r the man creating problem.Allah is great what is he written it will be happened. u don't have any other work. Mianmar udon't know what is happenning in lebanan Palastinian egypt Sudan,somalia,all worl happening against muslim u just keep quiet

    ReplyDelete

Powered by Blogger.