Header Ads



றிஸ்வி முப்தியுடன் பிரத்தியேக நேர்காணல் (பகுதி 2)


(அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் றிஸ்வி முப்தி www.jaffnamuslim.com ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலே இது)

4) ஹலாலை அடுத்து பௌத்த சிங்கள இனவாதிகளின் பார்வை முஸ்லிம் சகோதரிகளின் நிகாப் மீது திரும்பியுள்ளதே. இந்தச் சவாலை எப்படி வெற்றி கொள்ளப்போகிறீர்கள்? 

பெரும்பான்மை சமூகத்தினருக்கு ஹலால், நிகாப் விவகாரங்களில் மட்டுமல்ல முஸ்லிம்களின் அனைத்து விடயங்களிலும் சந்தேகமும் தெளிவின்மையும் காணப்படுகிறது. றிசானா நபீக்குடைய விடயம் வந்தபோது அதில் சந்தேகம் வந்தது. இப்பொழுது றமழான் காலத்தில் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்காக தயார் செய்யும் கஞ்சி விடயத்திலும் சிலருக்கு சந்தேகம் வந்துள்ளது என்றால் எங்களுடைய எவ்விடயத்தைத்தான் இவர்கள் விட்டுவைத்திருக்கிறார்கள்? முஸ்லிம்களுடைய சிறிய பெரிய அனைத்து விடயங்களிலும் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரை சந்தேகம் நிலவுகிறது. ஏனெனில் நாம் இஸ்லாத்துடைய போதனைகளை, அறிவுரைகளை, வழிகாட்டல்களை அது மனித சமூகத்துக்கு வழங்கியிருக்கும் நலவுகளை வெளிக்காட்டத் தவறிவிட்டோம். 

இஸ்லாம் காட்டித் தந்திருக்கும் குடும்பவாழ்க்கை,கொடுக்கல் வாங்கல்;, நற்குணங்கள், பிறருக்கு உதவி செய்யும் தன்மை,போன்ற இஸ்லாத்தின் ஆயிரக்கணக்கான நலவுகளை நாம் செயற்படுத்தத் தவறிவிட்டோம்.அதனால் அவர்களுக்குச் சென்றடைய வேண்டியவைகள் சரியான முறையில் அவர்களைச் சென்றடைவதில்லை.  இப்பொழுதுதான் எமது சமூகம் இவ்விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இன்ஷா இவ்விடயத்தை நாம் சீர்செய்யும்போது இஸ்லாத்தைப் பற்றிய சரியான தெளிவை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். முஷாரகா முறாபஹா போன்ற வட்டியில்லாத பொருளாதார முறை ஆரம்பிக்கப்பட்ட பிறகுதான் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையின் நன்மையை சிலர் உணர்ந்திருக்கிறார்கள்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பௌத்த மதத்தைச் சேர்ந்த அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று கூற முடியாது அவர்களில் பெரும்பாலானோர் மிகவும் கண்ணியமாகவம் அன்பாகவும் புரிந்துணர்வோடுமே நடந்துகொள்கிறார்கள். ஒரு சிலர் அதுவும் வெளிநாட்டு சக்திகளால் உந்தப்படுபவர்களே இத்தகைய செயற்பாடுகளில் இறங்குகிறார்கள். 

5) பாதுகாப்புச் செயலாலர் கோட்டபாய றாஜபக்ஷ ஜம்இய்யாவையும் பொதுபலசேனாவையும் சந்திக்கவைத்ததை தனது சாதனையாக குறிப்பிடுகிறார்.உங்களுக்கிடையிலான சந்திப்பின் பின்னர்முஸ்லிம்கள் மீதான பொதுபலசேனாவின் அடாவடிகள் குறைந்துள்ளது என நம்புகிறீர்களா? 

பாதுகாப்புச் செயலாலர் கோட்டபாய றாஜபக்ஷ ஜம்இய்யாவையும் பொதுபலசேனாவையும் சந்திக்க்வைத்ததை தனது சாதனையாக குறிப்பிட்ட விடயம் எனக்குத் தெரியாது. அவரால் கொடுக்கப்பட்ட பேட்டியை ஆங்கிலப் பத்தரிகைகளில் வாசித்தேன். அந்தப் பேட்டியிலிருந்து ' நான் பிரிந்து செல்பவர்களை சேர்த்துக் கொள்ள் விரும்புகிறேன், தீவிரமானவர்களை கட்டுப்படுத்த் முயற்சிக்கின்றேன், அனைவருடனும் தொடர்புகளை வளர்க்கிறேன் எனக்கு பொதுபலசேனாவுடனும் தொடர்பிருக்கிறது, கிறிஸ்த்துவ அமைப்பக்களுடனும் தொடர்பிருக்கிறது, அகில இலங்கை ஜம்இய்ய்ததுல் உலமாவுடனும் தொடர்பிருக்கிறது நாட்டுக்குத் தேவையான பாதுகாப்பு எற்பாடுகளைச் செய்திருக்கிறேன்' என்பதைத் தான் அவர் சொல்ல வருகிறார் என புரிந்துகொண்டேன்.

பாதுகாப்புச் செயலாலர் அவர்கள் ஜம்இய்யாவையும் பொதுபலசேனாவையும் சந்திக்க வைத்ததை தனது சாதனாயாகக் கூறியிருந்தால் அதனை எனக்கு அந்த வார்த்தைகள் மூலம் அறியத்தந்தால் இன்ஷா அல்லாஹ் அடுத்த்கட்ட நடவடிக்கைகளுக்கு அது பெரிதும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

பொதுபல சேனாஅமைப்பு பலதையும் பேசிக் கொண்டுதானிருக்கிறது. பொதுபல சேனா மற்றும் ஜம்இய்யாவுக்கிடையில் நடந்த சந்திப்பு அது வெறும் ஒரு அமர்வாகவே இருந்தது. அதில் எவ்வித உடன்பாடுகளோ கட்டுப்படுத்தல்களோ இணக்கம் காணப்படவில்லை. அன்றைய சந்திப்பில் நாம் அவர்களுக்கு மிகத் தெளிவாகக் கொடுத்த செய்தி என்னவென்றால் இஸ்லாத்தைப் பற்றியோ, மஸ்லிம்களைப் பற்றியோ  ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எம்மைத் தொடர்புகொண்டு சரியான தெளிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுதான். பொதுபலசேனா அமைப்பைச் சந்திப்பதில் ஜம்இய்யாவுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. ஆனால் அது முறையாக அமையவேண்டும் என்பதையே ஜம்இய்யா எதிர்பார்க்கின்றது. 

6) அரசாங்கத் தரப்புடன் ஜம்இய்யத்துல் உலமாவுக்கான தொடர்புகள் எப்படியுள்ளது?

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது உலமாக்களுடைய நிறுவனம். அது யாருடனும் அல்லது எந்த அரசுடனும் மோதக்கூடிய ஒன்றல்ல.ஜம்இய்யா ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி  அனைவருடனும் இணைந்து  மனிதநேயத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றது. முஸ்லிம்களுடைய உரிமைகளை,தேவைகளை ஆட்சியில் உள்ளவர்களுடன்தான் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் அவர்களுடன் தொடர்பை வைத்திருக்கின்றது. 

றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அனைவருடன் நல்ல முறையில் தொடர்பைப் பேணி வந்திருக்கிறார்கள். யூதர்களுடனும் ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறார்கள். எனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆட்சியாளர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற ஷரீஆவின் வழிகாட்டல்களைக் கவனத்திற்கொண்ட வண்ணம் எவ்வித அரசியல் சாயங்களையும் பூசிக் கொள்ளாமல் செயற்பட்டு வருகின்றது.  தொடரும்..

பகுதி 1
http://www.jaffnamuslim.com/2013/08/1.html 

1 comment:

Powered by Blogger.