Header Ads



'இலங்கை முஸ்லிம்கள் சவூதிஅரேபியாவை பின்பற்றுகிறர்கள் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது' - பேராசிரியர் ஹுசைன் மியா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறுவப்பட்ட நோக்கத்தை அடையக் கூடியதாக அது நகராவிட்டால் அதன் எதிர்காலம் கேள்விக் குறியாகலாம் என்று முன்னாள் பேராதனைப் பல்கலைக் கழக வலாற்றுத்துறைப் பேராசிரியரும், தற்போதைய புரூனாய் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான ஹுசைன் மியா தெரிவித்தார்.

(9.7.2013) கண்டி வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் இடம் பெற்ற 'கெண்டி போரம்' ஒழுங்கு செய்த இலங்கை முஸ்லிம்களின் சமகால நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களது உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கிலே உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று அதன் அங்கத்தவர்கள் தமது தனிப்பட்ட உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடும் ஒரு போக்கையே நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலைமை தொடருமானால் முஸ்லிம் காங்கிரஸ் தேவையில்லை என்ற ஒரு நிலைமை உருவாகலாம்.

கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போது கே.எம்.பி. ராஜரட்ன என்ற அரசியல்வாதி இன ரீதியான சிந்தனைகளை முன்னிலைப்படுத்தி குறுகிய காலத்தில் முன்சென்ற போதும் இன்று அது இருந்த இடமே தெரியாமல் போய் விட்டது. இது போலவே எமது நிலைமைகளும் அமையாலாம். இன்று பேரினவாதம் முன்னெடுக்கப்படும் ஒரு நிலையைக் காணமுடிகிறது. முச்சக்கரவண்டி முதல் அனைத்து வாகனங்களிலும் இதன் தாக்கத்தை நாம் காண்கிறோம். ஊடகங்களில் அதனைவிட மிகப் பெரிய அளவில் காண்கிறோம். அதே நேரம் இலங்கை முஸ்லிம்கள் சவூதி ஆரேபியாவை பின்பற்ற முற்படுவதாக ஒரு அச்ச உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் உணரமுடிகிறது.

அதே நேரம் தௌஹீத் ஜமாஅத் மற்றும் தலிபான்கள் போன்றவர்களின் செயற்பாடு பிற இனத்தவர் மத்தியில் சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது. ஏனெனில் தௌஹீத் அமைப்பு மிகத் தூய இஸ்லாத்தை கொண்டு வரமுற்படுவது தெளிவாகிறது. அதாவது புதிதாக எது வந்தாலும் அவை அனைத்தும் 'பித்அத்' என்று ஓரங்கட்டப் படுகிறது. அப்படியாயின் ஆதிவாசிகளின் வாழ்க்கைக்கு நாம் செல்லவேண்டிய நிலை ஏற்படலாம். ஏனெனில் தினம் புதியன புகும் போது 'நாம் மாற்றமில்லாத ஒன்றை' பின்பற்றுவதென்பது நாம் இன்னும் வேடுவர்களாகவே இருக்கவேண்டும் என்பது போலாகும்.

மலாய் சமூகம் இலங்கையைப் பொருத்தவரை சமய ரீதியில் பாரிய சேவைகளைச் செய்துள்ளார்கள். கண்டியைப் பொருத்தவரை மலாய் பள்ளி, லைன் பள்ளி போன்றவற்றை அவர்களே அமைத்துள்ளார்கள். கொழும்பு உற்பட பிர இடங்கள் பலவற்றில் நாம் மலாயர் அமைத்த பள்ளிகளைக் காணலாம். இலங்கையில் காணப்படும் அனேக ஸியாரங்கள் மலாயர்களுடையதாகும். டி.பி.ஜாயா போன்ற மலாய் இனத் தலைவர் ஒருவரே அன்று இலங்கை முஸ்லிம் இனத்திற்கு தலைமை தாங்கினார். 

சுமார் 500 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மலாயர்கள் மூன்றாம் தரப் பிரஜைகளாக இருக்கவில்லை. ஆனால் பிற்பட்ட காலத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காக பிரித்தானியர் முதல் ஒல்லாந்தர் போத்துக் கேயர் போன்ற பல ஆட்சியாளர்களின் தேவைக்காகவும் பலதரப்பட்ட மலாயர் இங்கு கொண்டு வரப்பட்டனர். மலாயர்களை ஜாவா இனத்தவர் எனவும் குறிப்பிடுவர். இதிலிருந்துதான் 'ஜாவாகச்சேரி' என்பது சாவகச்சேரியாகவும் இன்னும் எத்தனையோ ஜாவாலேன்கள் உருவாகின. எனவே இலங்கை மலாயர் சமூகத்தின் பூர்வீகம் பற்றி ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள நான் எதிர்காலத்தில் இலங்கை முஸ்லீம்களது வரலாற்றுப் பின்னணியையும் நோக்க வேண்டியுள்ளது. 

ஏனெனில் இன்று இலங்கை முஸ்லிம்களது வரலாறு திரிபுபடுத்தப்பட்டு வருகிறது. இலங்கை முஸ்லிம்கள் நாணயம் கொண்டவர்களாகவே இருந்தார்கள். வெறும் வியாபாரிகள் மட்டுமல்ல. எத்தனையோ துறைசார்ந்தவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தர் அதிஷ்ட்டம் என்ன வென்றால் அனேக புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் பேராசிரியர் அமீர் அலி, டாக்டர் சுக்ரி, மற்றும் என் போன்றவர்களையும் குறிப்பிட முடியும் என்றார்.

6 comments:

  1. You want to protect community or the religion. We want to apraid to Allah or others. your dress code is belongs to muslims or other community. Your throughts are very clear please do not reaseach the muslims history. pls do not compare Dr Shukry with you and Ameer Ali. Dr Shukri is great professor and done lots for muslims.

    ReplyDelete
  2. இஸ்லாத்தை பற்றி பேசுபவருக்கு இஸ்லாதின் எந்த அறிகுறியும் இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயம் இவருக்கு என்ன தகுதி இருக்கிறது தவ்ஹீத் வாதிகளை பற்றி பேச ??

    ReplyDelete
  3. why my comment was not display ??????

    ReplyDelete
  4. ivar nabi sal avarkalayum sahaabaakalayum veduvar kaalathil vaalnthvarkal enru solla varukiraar ra ?? islam teryatha jahilatan ivar ???

    ReplyDelete
  5. வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சற்று இஸ்லாத்தையும் கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும். அவருக்கு இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு அவர் சில முட்டாள்தனமான கருத்துக்களை கூறியிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு புத்தி ஜீவி(?) உளறிவிட்டு சென்றது போல் இது இல்லாவிட்டாலும், இவருக்கு "தௌஹீத்" என்றால் என்ன, தலிபான் என்றால் யார் என்ற வித்தியாசம் கூடத் தெரியவில்லை. இஸ்லாத்தின் எதிரிகள் கூட தலேபானையும் தௌஹீதையும் முடிச்சுப் போட்டுப் பேசுவதில்லை. அத்தோடு இவருக்கு "பித்'அத் " என்றால் என்னவென்றே தெரியவில்லை என்பதும் தெளிவாகிறது. "பித்'அத் " என்பதை எதிர்பவர்களும் சரி அல்லது அதை ஆதரிப்பவர்களும் சரி இவரது விளக்கத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

    உள் நாட்டில் சிறந்த அறிவாளிகளும், மார்க்க மேதைகளும் இருக்கும் போது வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வருபவர்களை எல்லாம் மேதைகள் என்று நாம் மேடை ஏற்றினால், இப்படித்தான் உளறிவிட்டு செல்வார்கள்.

    ReplyDelete
  6. markka arivillathawarkalay..meadaiel peasaviddal ippadythan nadakkum....

    ReplyDelete

Powered by Blogger.