'முஸ்லிம்கள் செய்யும் குற்றங்களை சிங்களவர்கள் தூக்கிப் பிடிப்பதில்லை' - ஜனாதிபதி மஹிந்த
முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு எதிராக செய்யும் குற்றங்களை, சிங்களவர்கள் தூக்கிப் பிடிக்காத நிலையில் மஹியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதை முஸ்லிம்கள் ஏன் தூக்கிப்பிடிக்க (பூதாகரமாக்க) வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மஹியங்கனை பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அங்கு பன்றியின் இரத்தம் ஓட்டப்பட்டமை மற்றும் தற்போது அப்பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளமை குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகள் இருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.இதன்போதே ஜனாதிபதி மஹிந்த மேற்சொன்னவாரு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பலாங்கொடையில் அண்மையில் பௌத்த மதகுரு சிறுவன் ஒருவனுக்கு, முஸ்லிம் ஒருவர் செக்ஸ் சீ.டி.களை போட்டு காண்பித்துள்ளார். இது மாபெரும் குற்றம். ஆனால் முஸ்லிமின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சிங்களவர்கள் கிளர்ந்தெழும்பவில்லை. சிங்களவர்கள் தூக்கிப்பிடிக்கவில்லை. முஸ்லிம்கள் செய்யும் பல குற்றங்களை நாங்கள் அம்பலப்படுத்தவில்லை. அவற்றை அமுக்கி வைத்திருக்கறோம்.
இப்படியிருக்கையில் மஹியங்கனை பள்ளிவாசல் மீதான தாக்குதல், பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளமை குறித்து முஸ்லிம்கள் ஏன் தூக்கிப்பிடிக்க வேண்டும்..? முஸ்லிம்களுக்கு எதிரான சிறுசிறு சம்பவங்களை முஸ்லிம்கள் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்..?? எனவும் ஜனாதிபதி அதிரடியாக கேட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அதிரடியை கேட்டு ஸ்த்தம்பித்து நின்றுள்ளனர் 2 முஸ்லிம் அரசியல்வாதிகளும்..!
ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஸவிடமிருந்து முஸ்லிம் சமூகம் குறித்து வெளிப்பட்டுள்ள இந்த கூற்றுக்கள் குறித்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு திங்கட்கிழமை, 22-07-2013 அன்று ஒரு முஸ்லிம் பிரமுகர் குறிப்பிட்டிருந்தார். எனினும் இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்துவதற்காக நாம் காத்திருந்தோம்.
இந்நிலையில் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் செவ்வாய்கிழமை 23-07-2013 அன்று ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் தருகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மஹியங்கனை பள்ளிவாசல் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டதை உறுதிப்படுத்தினார். மஹியங்கனை பள்ளிவாசல் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசிய முஸ்லிம் அரசியல்வாதியே அதை தம்மிடம் குறிப்பிட்டதாகவும் அந்த முஸ்லிம் அரசியல்வாதி எமது இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
நமெக்கெல்லாம் இதுவும் வேணும் ....இன்னமும் வேணும்
ReplyDeleteNothing to comment... Only action!
ReplyDeleteDear Muslim voters, please do not vote this goverment or goverment support muslim candidates next time. We should show our unity and power to this anti-muslim goverment. HARAM to vote this UPFA.
ReplyDeleteஎப்படி எமது நாட்டு தலைவரின் பதில் இவருக்கு தனி மனிதன் செய்யும் குற்றங்களையும் ஒரு சமூகத்துக்கு எதிராக செய்யும் குற்றங்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாத தலைவர் நம் நாட்டு ஜனாதிபதி.
ReplyDeleteஎவர் தவறு செய்கின்றாரோ அவருக்கு தண்டனை கொடுக்கவும் இதில் முஸ்லீம் சிங்களம் தமிழ் என்று பார்க்க தேவை இல்லை.
இவர் பதில் சிங்கள மக்களையும் சீண்டி விடும் ஒரு பதிலாகதான் உள்ளது. உண்மையில் இவர்களுக்கு நாட்டில் சமாதானம் என்பது தேவை இல்லை எதோ ஒரு பிரச்சினை நாட்டில் இருந்து கொண்டே இருக்க வண்டும் அப்பதான் இவர்களுக்கு நெடுங்காலம் கதிரையில் உக்காறலாம். இவர்களை தலைவராக்கிய முஸ்லிம்களும் இனியாவது நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என நினைக்கின்றேன்.
படைத்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
Every body can understand about this guy inshallah very soon he will reach hell
ReplyDeletefounder of the bbs
ஒரு ஜன நாயக சோஷலிச குடியரசின் அதி மேன்மை தகு ஜனாதிபதியின் கருத்து இப்படி இருக்குமென்றால் இலங்கையில் முஸ்லீம்களுக்கு இனியும் இந்த அரசின் மூலம் நீதி கிடைக்குமா....???
ReplyDeleteமுஸ்லீம்களே சிந்திப்போம் செயல் படுவோம்.....!!!!
யா அல்லாஹ் இலங்கை முஸ்லீம் உம்மாவை பாதுகாப்பாயாக ......முலீம்களின் எதிரிகளுக்கு இந்த சங்கை மிக்க ரமலான் மாதத்தில் இஸ்லாத்தை புரிய வைப்பாயாக......!!!!!
Most of the child abuse happened by monks just remind this guy we dont want to teach any monks becouse they know allready very well
ReplyDeleteDestructive of Holy places is not a big offence, we have understood from our Hon President’s statement. Sorry to say whoever voted for this leader ship they must undergo. As a Muslim I have been blaming to our community that we still don’t have proper leadership to talk on behalf of Muslims
ReplyDeletethis man has done all those things how is it? what is the different video tab and the mosque? how he joining? mahinda thinging we Muslims are mad maybe Muslims minister who is with him they can be a mad even the child knows mahinda is the one doing all the games wait and see he will face big trouble insha Allah he is a big cheater. he is plying with mosque.
ReplyDeleteஅதுதானே ஜனாதிபதிக்கு இதை எல்லாம் சொல்லத்தான் வேண்டுமா ,அவருக்குத் தெரியமல் இந்த நாட்டில் என்னதான் நடக்கும் . நல்லவேளை நமது அரசியல் ஆசாமிகளின் விளையாட்டுக்களை அவர் சொல்லவில்லை . அப்போ முஸ்லிம் சமூகம் = செக்ஸ் சீடி
ReplyDeleteமிகவும் ஆபத்தான நிலையை நோக்கி இலங்கை முஸ்லிம்களது இருப்பு உள்ளது....!
ReplyDeleteஇதுகுறித்து முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது சுயநல போக்கை மறந்து இலங்கை முஸ்லிம்களது எதிர்காலம் குறித்து சிந்திக்கவேண்டும்!
உலமாக்கள் மார்க்க உபதேசத்துடன் நிறுத்திவிடாது இன்றைய முஸ்லிம் விரோத சக்திகளது அரசியல் முன்னெடுப்பு பற்றிய தெளிவை முஸ்லிம் சமூகத்திற்கு அறிவூட்டுவதுடன் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் நம்பிக்கையை கட்டியெழுப்பத் தேவையான ஆக்கபல தாவா முன்னெடுப்புகளை செய்யவேண்டும்.
முஸ்லிம் புத்திஜீவிகள் இதுகுறித்த விழிப்புணர்வுகள் மற்றும் பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கு அறிவுபூர்வமான நியாயங்களையும் வெளிப்படை உண்மைத் தன்மைகளையும் வழங்க முன்வரவேண்டும். இஸ்லாத்தை நபி(ஸல்) அவர்கள் மக்காவில் எவ்வாறு மக்கத்து குப்பார்களிடம் முன்வைத்தார்களோ அதேபோன்று எமது தாவாக்களை முற்படுத்த வேண்டும்.
இலங்கையினது முஸ்லிம்களது வாழ்க்கை முறைபற்றியும் ஏனையவர்களது வாழ்கைமுறையில் மேலைத்தேய சிந்தனைத் தாக்கத்தாலும் அரசியல் முன்னெடுப்புகளாலும் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான சூழலை விளக்கி முஸ்லிம்களது வாழ்கைமுறையில் நம்பிக்கை ஏற்பட ஏதுவான நியாயங்களை முன்வைக்க முன்வரவேண்டும். அதுவே எமது பலம்! எமது பாதுகாப்பு!
இந்த நாட்டின் ஜனாதிபதி இப்படி சொல்வது மிகவும் பாரதூரமானதும் கண்டிக்க பட வேண்டிய விடயமாகும். இவர் முஸ்லிம்களை நாசுக்காக எச்சரிக்கிறார் போல் தெரிகிறது. அதே நேரம் சிங்கள மக்களையும் உசிப்பி விடுகிறார் போல் தெரிகிறது.
ReplyDeleteஇந்த கேடு கேட்ட முஸ்லிம் அமைச்சர்களையும் எம்பிக்களையும் நம்பி எந்த பிரயோசனமும் இல்லை.
முஸ்லிம்கள், இந்த ராஜபக்ச அன் கோ வுக்கு எதிராக வீதிக்கு இறங்குவதை தவிர வேறு வழியில்லை. ஈமான் உள்ள அத்தனை முஸ்லிம்களும் நிச்சயமாக இந்த கொடூர துவேசியான ராஜபக்சவுக்கு எதிராக செயற்படுவார்கள்.
யா அல்லாஹ் இந்த கொடுங்கோலனான ராஜபக்சவிடம் இருந்து முஸ்லிம்களையும் பள்ளிவாசல்களையும் காப்பாற்றுவாயாக..! அவனை சிறுமைபடுத்தி அழித்து விடுவாயாக..!! ஆமீன்
Hon. Mr. Rajapaksha, Kuruwazu enna? Oru muslim nafar saizazai, Muslimgal saizazaha solluwaru eppadi? Palli visayam oru kuluwal saiyappattazu. Ezula erunda theriyawaruwazu Mr. President supporting to that sinhala Groups (BBS,Rawa... and ect.), He is not supporting to Peace.
ReplyDeleteMuslims ellorum otrumai pada wendum, Otrumai ennum kaitrai pattri pudiungal.
காக்காமாரே சொறண கெட்டுப்போகாம எதிர்வரும் தேர்தலிலாவது உங்கட பதிலக் கொடுங்கடாப்பா.
ReplyDeletesubhaanallah
ReplyDeleteதனி நபர் குற்றத்திற்கும், ஒரு இனத்திற்கெதிரான வன்முறைக்கும் வேறு பாடு தெரியாத ஒரு பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதியின் கதையா கேட்க வெட்கமாக இல்லையா?
ReplyDeleteஉடன் அவரை சிறுவர் துஸ்பிரயோக சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு போட்டிருக்கலாமே!
ReplyDeleteநாட்டின் ஜனாதிபதியே பேரினவாதிகளின் காவலனாக உள்ள நிலைமையில் அவரிடம் இருந்து இனி எதைத்தான் முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்க முடியும் ..??? 18வது அரசியல் திருத்தம் மூலம் எத்தனை தடவைகளும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்கு மூன்றில் இரண்டு பெருன்பான்மை வழங்கிய மு.கா.வும்,ஜனாதிபதியின் எச்சில் எலும்புகளுக்கு காத்திருக்கும் ஏனைய முஸ்லிம் தலைமைகளும் என்ன பதிலை வழங்குவார்களோ ...பெளத்த மதகுரு சிறுவனுக்கு .செக்ஸ் சி.டிபோட்டு .காட்டிய கயவனை ஏன் சட்டத்தின் முன் நிறுத்தி உச்ச தண்டனை வழங்க முடியவில்லை? ஜனாதிபதியின் கையாலாகாத தன்மையா அல்லது வேண்டுமென்றே முஸ்லிம்களை இக்கட்டில் மாட்டிஇலங்கையில் ஒரு மியன்மாரை உருவாக்கும் எண்ணமா ????
ReplyDeleteசிங்கள சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு முஸ்லிம் பெயர்தாங்கி ஒருவரால் ஆபாசப் படம் காட்டப்பட்டதுதான் ஜனாதிபதியின் பார்வையில் மாபெரும் குற்றமாகத் தெரிந்திருக்கின்றது.
ReplyDeleteஆனால் இதைவிட மோசமான சமூக ஒழுக்கம் ரீதியான குற்றச் செயல்கள் பல அன்றாடம் நமது நாட்டில் சிங்களச் சமூகத்திற்குள்ளேயே நடைபெறுவதாக ஊடகங்கள் தினசரி செய்தி வெளியிடுகின்றன.
அவற்றையெல்லாம் ஜனாதிபதி மாபெரும் குற்றங்களாகக் கருதி நடவடிக்கைகள் எடுத்ததாக ஊடகங்களில் காண முடியவில்லை.
குறித்த சம்பவம் தனியொரு கேடுகெட்ட முஸ்லிம் பெயர்தாங்கி நபரால் புரியப்பட்டது. அதற்காக சிங்கள சமூகம் பொங்கியெழயத் தேவையில்லை. பொலீசார் உரிய முறையில் சட்ட நடவடிக்கை எடுத்து அவரது தலையைச் சீவுமாறு சட்டம் தீர்ப்பளித்திருந்தாலும் முஸ்லிம் சமூகம் அதற்காகப் பொங்கி எழுந்திருக்காது என்பதை ஜனாதிபதியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் குற்றச் செயல்களை மறைக்க வேண்டும் என எந்தவொரு முஸ்லிமும் இந்த அரசாங்கத்தைக் கோரியிருக்கவில்லை. நீங்கள் சட்டத்தை அனைவருக்கும் சமமாகப் பிரயோகித்தால் அதை நாம் வரவேற்போம். அப்படிச் செய்தால்தான் நாட்டில் இவ்வாறான குற்றச் செயல்கள் குறையும்.
அதை விட்டு விட்டு நாட்டின் தலைவரான நீங்களே முஸ்லிம்களின் குற்றச் செயல்களை மறைத்து வருவதாகக் கூறுவதானது குற்றச் செயல்களை ஊக்குவிக்கவும், முஸ்லிம் சமூகத்தை பிளக் மெயில் பண்ணுவதாகவுமே அமையும்.
குறித்த முஸ்லிம் பெயர்தாங்கிக்கு எதிராக உங்கள் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அவருக்கு மாத்திரமல்ல இவர் போன்ற கஞ்சா விற்பனை, குடு விற்பனை, பொது இடத்தில் சாராயம் குடித்துக் கலாட்டா செய்யும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் நீங்கள் சட்ட நடவடிக்கை எடுங்கள். அதேபோல் உங்களின் சிங்கள சமூகத்திலும் இவ்வாறு நடக்கும்போது அவ்வாறே பாரபட்டசமில்லாமல் செயற்படுங்கள்.
மஹியங்கனை பள்ளிவாசல் தாக்கப்பட்ட செயலை இந்தச் சம்பவத்துடன் நீங்கள் முடிச்சுப் போட்டு உதாரணங்காட்டிப் பேசியிருப்பது உங்களின் உயர்ந்த சமூக அந்தஸ்த்துக்கு உகந்ததல்ல.
முஸ்லிம்கள் எங்காவது பௌத்த விகாரையைத் தாக்கி அதற்குள் மாட்டிறைச்சியையும், மாட்டின் இரத்தத்தையும் வீசி அசிங்கப்படுத்தியுள்ளார்களா?
ஏன் மொட்டைத்தலையுடன் முழங்காலைச் சம்பந்தப்படுத்துகின்றீர்கள்? இப்படியொரு உதாரணத்தைச் சொல்வது நாட்டின் தலைவரான உங்களுக்கே நன்றாகத் தெரிகின்றதா?
இனி இந்ந நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எத்தகைய அநியாயங்கள் இடம்பெற்ற போதிலும் உங்களின் மனோ நிலை இவ்வாறுதான் இருக்கும் என்பதை இதன் மூலம் முஸ்லிம் சமூகம் தெரிந்து கொண்டது.
நீங்கள் இவ்வாறு பேசியது, இதுவரை காலமும் பொது பல சேனா மைந்தர்கள் பேசிய அவதூறையெல்லாம் விடவும் அவலட்சணமாகத் தெரிகின்றது. இந்த மனப் பதிவை உங்களிடம் இருந்து எப்போது எப்படி அகற்றப் போகின்றீர்கள்?
"அப்பன் நூறு ருபா களவெடுத்தால் பிள்ளை ஐநூறு ரூபா களவெடுத்திருந்தாலும் அதைக் கண்டு கொள்ளக் கூடாது" என்பது எமது மார்க்கமல்ல. முகம்மது (ஸல்) வின் மகள் பாத்த்திமா திருடினாலும் அவரது கைகள் துண்டிக்கப்பட வேண்டும்' என்பதே எமது மார்க்கமாகும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
அதி மேதகு ஜனாதிபதிஅவர்களே செக்ஸ் சீடிகொடுத்தவனை விசாரணை செய்ங்க அதற்கு இது எப்படி ஒருதனிநபரின் கோவலமான செயலுக்காக இஸ்லாமியர்களின் வணக்கஸ்த்தலங்களை குறிவைத்து தாக்குவது சரிதானா ஜனாதிபதி அவர்களே கிட்டத்தட்ட 15 இஸ்லாமியர்களின் வணக்கஸ தலங்கள் நன்றிகள்
ReplyDeleteMOONRAANTHARA ARASIYAL VAATHIYAI PONRA KARUTTHU. VETKAMILLAIYAA. NAMATHU AMACHCHAR KALUKKU....
ReplyDeleteஅப்படி என்றால் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலுள்ள பௌத்த விகாரைகளை முஸ்லிம்கள் மூடிவிட்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?
ReplyDeletepothuma aappu alli valangineerhal?????
ReplyDeleteMr. President. What we understood from your statement is that you do not have thinking power. The person who showed a sex video is far different from the Mosque as If Muslims come to Pansala and do the same thing that of your racists did, will your people of Buddhist accept this? You cannot touch our religious matter and compare with sex video scandal.
ReplyDeleteFear of your creator and your creator shaped you as a human being and he made you as a president of Sri Lanka. You are not going to live forever in this temporary world. According to Quran that All creatures will taste the death and you are not exception in this.
As you are a president of Sri Lanka, do not consider that only Buddhist can live peacefully in Sri Lanka. Do your job perfectly.
Mr. President, If you are not going to take any action against these racists, then you will face second face of ethnic war in Sri Lanka and you cannot stop it very soon.
தவறு செய்தால் குற்றம் குற்றமே. CD காட்டினால் சட்டப்படி தண்டனை வழங்குங்கள். அது முஸ்லிமாயினும் சரியே. ஆனால் அதைக் காட்டி இதை நியாயப்படுத்த வேண்டாம். CD விடயத்தை பெரிது படுத்தினால் யாருக்கு வெற்கம் ? அவர்களுக்குத் தான். அவர்களின் மதகுருக்கள் களவாக செய்யும் அத்தனை விடயங்களும் வெளிச்சத்திற்கு வந்து விடும். அவர்கள் முஸ்லிமகளின் கடைகளில் களவாக இறைச்சி சாப்பிடுவது, களவாக நீலப்படம் பார்ப்பது எல்லாமே அமப்ளத்திற்கு வந்து விடும் அதனால் தான் அத விடயத்தை அவங்க பெரிசு படுத்தல்ல. முஸ்லிம்களின் மேலுள்ள அன்புல அன்று.
ReplyDeleteஅனைத்து முஸ்லிம்களும் எதிர்பார்த்த ஒரு விடயமே இது. முஸலிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி மூலமாவது முஸ்லிம்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் முஸ்லிம்கள் எதிர்பார்த்திருந்தனர்... ஆனால் அது????????? என்றாகிவிட்டது...
ReplyDeleteமுஸ்லிம்களே தோ்தல் காலம் சிந்தித்து முடிவெடுங்கள்....
Allah Knows Best....
ReplyDelete9:78. "அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?"
Idu oru kadaya, Shattathai nilanatoongo edeyim kandukkamal irukka thevai illai.
ReplyDeleteJust implement the law be it Muslim or Singhalese , without ignoring mistakes.
இன்று முஸ்லிம் சமூகத்துக்கு ஏட்பட்டுள்ள அநியாயங்களும், அநீதிகளும் மஹிந்த சிந்தனையின் வேலைத்திட்டத்தில் உள்ள விடயம்தானே.........
ReplyDeleteஅல்லாஹ்வின் சாபக்கேடு மிக விரைவில் அதி மேதகு ஜனாதிபதியை வந்தடையும்.
கிள்ளுவதும் , ஆட்டுவதும்
فأعرض عنهم وانتظر إنهم منتظرون
மிஸ்டர் ஜனாதிபதியின் ஒரு திட்டமிட்ட றாமா .இலங்கைவாழ் முஸ்லிம்களின் கையாலாகத்தனத்தை அறிந்து கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டம்.தன்னிடம் உள்ளஅதிகாரத்திமிரில் ,படைபலம்உள்ள மமதையில் மார்நிமித்தி எதையும் சொய்யலாம் என்று சொய்துகொண்டிருக்கும் சொயல். சர்வஅதிகாரமும்உள்ள அல்லாவுடையபபலம் ,சக்தி,உதவி நமக்குகிட்டவோண்டுமானால் பொறுமை கொண்டும் தொழுகை கொண்டும் பிரார்திப்போம்.அல்லாஹ்விடம் ராஜபக்ச எல்லாம் வொறும்தூசி.
ReplyDeleteஒருவர் செய்த தப்புக்கு அவருக்கு தண்டனை கொடுக்க முடியதா நாடு ,, ஒரு கூட்டம் ஜும்மாஹ் தொழ கூடாது தொழுதால் பிரசினை யஹும் என்று சொன்னதுதான் , உடனே போலீஸ் ,, அமாம் நிகழ் தொழ வேணாம் , என்று சொல்லும் நாடு நம்நாடு ,, பாதுக்காக வேண்டிய போலிசே பயம் என்றால் என்ன காரணம்,, ஆர்டர் வந்த இடம் எங்கே ,, அங்கு தான் எங்கள் அரசியல் தளைஹல் எல்லாம் மண்டி இட்டு நிக்கிறது,,
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMuslim Politicians you can achieve much more from this kind of minute mind President as a childish response and .decision
ReplyDeleteசகோதரர்களே! உண்மையில் அந்த சிறுவனுக்கு ஆபாசமாக எதனையும் அவர் காட்ட வில்லை, என்றாலும் இவருடைய 'சிப்' இல் இவர் ஆபாசமான காட்சிகளை பதிவு செய்து வைத்துள்ளார் . அந்த பௌத்த சிறுவன் 'சிப்' ஒன்றை வாங்க விரும்பிய போது இவர் இந்த 'சிப்' ஐ அவனுக்கு வழங்கியிருக்கின்றார். இது இவரின் தனிப்பட்ட குற்றம் மற்றும் விற்பதாக இருந்தால் அவைகளை அழித்து விட்டு விற்பனை செய்திருக்கலாம். (இது வேறு விடயம்) அந்த சிறுவன் இந்த 'சிப்' இல் இருந்த இந்த காட்சிகளைப் பார்த்ததற்கு இவர் என்ன செய்ய முடியும். மேலும் இவர்கள் ஆபாசமான விடயங்களைப் பார்க்காத உத்தமர்கள் (குருவிகள்).
ReplyDeleteமேலும் ஒருவரது தனிப்பட்ட விடயத்தையும் சமுதாய விடயத்தையும் ஒப்பாக்கி எந்த வித அறிவுமற்ற இனத்துவேஷத்தைத் தூண்டும் ஜனாதிபதிக்கு வாக்களிக்கும் எமது முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்றி. தனது உடலைக் கீரினால் நீள நிரமான இரத்தமே ஓடும் என்று கூறும் முஸ்லிம் வாக்காளர்களே உங்கள் உடல் மட்டுமல்ல இந்த சமுதாயத்தின் உறுப்பினர்களின் உடல்கள் கீறப்பட்டால் தான் இரத்தம் எல்லாம் சிவப்பானது எமது மடத்தனமான சிந்தனைகள் தான் நீள நிறமானது என்பது புரியும், அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.
முஸ்லிம்களே சிந்தித்து செயல்படுவோம். இஸ்லாமியர்களாக வாழ்வோம் அல்லாஹ்வின் உதவி எம்மை வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.
If this is true, I am very sorry/sad to say about our president knowledge of comparison.
ReplyDeleteHe doesn't know how to compare apple and orange. When any action affect the society, then this is big problem. When it is individual, still minor and punishable.
Think, do we need to support the current government?
Thanks
For Information to Muslim Politician
ReplyDeleteIf you have little bit of Eeman please go away from government. You all want to say the answer to Allah for the Day of judgement.
மீண்டும் மீண்டும் ஜனாதிபதியினூடாக வானம் பார்க்க வேண்டுமா! குற்றச் செயல்களைத் தெரிவிக்க வேண்டிய இடம் பொலிஸாரும், நீதிமன்றமும் என்பதை இன்னமும் நமது அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் கவலைக்குரியது. அபாயமானது.
ReplyDeleteஜனாதிபதி நீதிபதியல்ல. அவர் செயற்படுத்தும் அதிகாரம் கொண்ட அதியுயர் நிர்வாகி. இங்கு அரசியல் தீர்வல்ல தேவையானது. நீதியின் தீர்ப்பு. இதனை ஜனாதிபதியால் ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையை செல்லாமல் ஆக்கியது ஒரு நீதிமன்றத் தீர்ப்பே என்பதிலிருந்தாவது படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
புவி றஹ்மத்துழ்ழாஹ் காத்தான்குடி.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ். நான் கூற வேண்டும் என நினைத்தற்கு மேலாகவே நீங்கள் கூறிவிட்டீர்கள். இதற்குப் பின்னராவது முஸ்லிம் எனக் கூறிக் கொள்ளும் அரசியல் வியாபாரிகளுக்கு உணர்வு வருமா எனப் பார்ப்போம்.
நீங்கள் கூறாத ஒன்றை நான் கூறுவதற்கு அனுமதியுங்கள். அதாவது, முஸ்லிம் அரசியல்வாதிகளை நன்றாகவே புரிந்து அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை மிக நன்றாகவே அறிந்தும் வைத்துள்ளார் மேன்மைதங்கிய ஜனாதிபதி. உறைக்கவே மாட்டாது என்ற உண்மை.
சுருங்கக் கூறின்:
ReplyDeleteதனியாள் இன்னொரு தனியாளுக்கு எதிராகச் செய்த குற்றமும். அமைப்பு ரீதியில், திட்டமிடப்பட்டு, பகிரங்கமாகச் செய்யப்படும் ஓரின மதவழிபாட்டுத் தலங்களின் மீதான தாக்குதலும், தகர்ப்பும் சமப்படுத்தக் கூடியதல்ல.
இவ்வாறான பிழையான சமன்பாட்டை ஒரு பல்லின சமுதாயம் வாழும் நாட்டின் தலைவர் கூறியிருப்பாரா! அப்படியாயின் அது விதியின் வன்மையே!
இதன் பின்னர் நடந்தால் நட்ட நடவடிக்கை எடுப்பேன் எனக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன ஆனது!
சுருங்கக் கூறின்:
ReplyDeleteதனியாள் இன்னொரு தனியாளுக்கு எதிராகச் செய்த குற்றமும். அமைப்பு ரீதியில், திட்டமிடப்பட்டு, பகிரங்கமாகச் செய்யப்படும் ஓரின மதவழிபாட்டுத் தலங்களின் மீதான தாக்குதலும், தகர்ப்பும் சமப்படுத்தக் கூடியதல்ல.
இவ்வாறான பிழையான சமன்பாட்டை ஒரு பல்லின சமுதாயம் வாழும் நாட்டின் தலைவர் கூறியிருப்பாரா! அப்படியாயின் அது விதியின் வன்மையே!
இதன் பின்னர் நடந்தால் நட்ட நடவடிக்கை எடுப்பேன் எனக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன ஆனது!
so mr president if we break the temples it will be also be small matter
ReplyDeleteottrumai thaan namakku ore ayudam 2013 sl elactionil tamil makkal effadi wakkaliththarhal em muslim makkal ithai sindikkanum naam otrumaiyyaha irundal oruwarum emmodu walaatta mudiyadu
ReplyDeleteகிருக்குத்தனமான பின்னூட்டம்
ReplyDelete