Header Ads



மஹியங்கனை பள்ளிவாசல் தொடர்பில் தினகரன் வாரமஞ்சரியின் செய்தி..!

(தினகரன் வாரமஞ்சரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை, 28-07-2013 வெளியாகியுள்ள செய்தியே இது. இச்செய்தி தொடர்பில் மேலதிக விபரங்களை விரைவில் எமத இணையத்தில் எதிர்பாருங்கள்..!)

மஹியங்கனையில் தொழுகை நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் இடமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பள்ளிவாசலாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும், அது வியாபார நடவடிக்கைகளுக்காக தன்னால் பதிவு செய்யப்பட்ட தனது வர்த்தக நிலையம் எனவும் அதன் உரிமையாளர், மத விவகார அமைச்சரும், பிரதமருமான தி. மு. ஜயரத்ன விற்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளார். இதன் மூலமாக இந்த விவகாரம் முடிவிற்கு வந்துள்ளது. இனிமேலும் இவ்விடயத்தை பெரிதுபடுத்தி எவரும் சர்ச்சைகளைத் தோற்றுவிக்கத் தேவையில்லை என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் எழுதிய கடிதத்தின் விபரம் வருமாறு :-

24.07.2013

கெளரவ பிரதமர்
டி. எம். ஜயரத்ன அவர்கள்
புத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சு
இல. 115, விஜேராம மாவத்தை
கொழும்பு 07.

மஹியங்கனை நகர முஸ்லிம் பள்ளிவாசல் தொடர்பானது

மேற்படி முகவரியில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நான், 17 ஆம் இலக்கம் கொண்ட ரன்முத்து கோல்ட் ஹவுஸ் எனும் பெயரில் தங்க நகை விற்பனை நிறுவனமொன்றை கடந்த 15 – 20 வருட காலமாக மஹியங்கனை நகரத்தில் நடத்தி வருகின்றேன். மஹியங்கனை பிரதேச சிங்கள பெளத்த மக்களுடன் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகின்றேன். எனது வியாபார நிறுவனம் மஹியங்கனை பிரதேச சபையிடமிருந்து பெறப்பட்ட வியாபார அனுமதிப் பத்திரத்தின் கீழ் நடத்தப்படுகின்ற வியாபார நிறுவனமாகும். இந்த இடத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் பள்ளிவாசலாக பதிவு செய்யவோ அல்லது பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவோ இல்லை என்பதையும் எனது இந்த வியாபார நிறுவனத்தில் எமது குடும்பத்தின் பிள்ளைகள் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டபோதும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இதனை முஸ்லிம் பள்ளிவாசலாகப் பயன்படுத்தவில்லை என்பதை இத்தால் சத்தியம் செய்து உறுதிப்படுத்துகின்றேன்.

நன்றி

இங்ஙனம் நம்பிக்கையுள்ள
ஷிgனீ........... 
17 பி, கண்டி வீதி, மஹியங்கனை.

முக்கிய குறிப்பு - இந்த செய்தி அரசாங்க சார்பு ஊடகத்திலேயே வெளியாகியுள்ளது. இந்த செய்தி தொடர்பில் உண்மைத் தகவல்களை விரைவில் பதிவேற்றுவோம்..!

4 comments:

  1. Issue solved, Same as Halal issue solved by ACJU! What is happening in Sri Lanka?

    ReplyDelete
  2. இந்தக் கடிதம் குறித்து மஹியங்கனை பள்ளிவாசலின் ஸ்தாபகர் என்று கூறிக்கொண்டு அமைச்சர் றவூப் ஹக்கீமைச் சந்தித்துப் பேசிய காத்தான்குடியைச் சேர்ந்தவரான அல்ஹாஜ் எஸ்.எம். சீனி முகம்மது ஜே.பி. என்ன சொல்கின்றார்?

    இக்கடிதம் எழுதியுள்ள ஷிgனீ என்பவருக்கும் அவருக்கும் என்ன வகையான உறவும், தொடர்பும் உள்ளது?

    முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம். ஸமீல் நளீமி இதுபற்றி என்ன சொல்கின்றார்?

    மஹியங்கனையில் 'மஸ்ஜிதுல் அறபா ஜும்ஆ பள்ளிவாசல்' என்ற பெயரில் ஒரு பள்ளிவாசல் அவரது திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? இல்லையா?

    தினகரன் வார மஞ்சரியில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதத்தின்படி இவ்விடயம் உண்மையானால் அமைச்சர் றவூப் ஹக்கீம் தலைவர் அஷ்ரபுடன் அம்பாறைக்குச் செல்லும் வழியில் இந்தப் பள்ளிவாசலில் தொழுததாகக் கூறியது பொய்யா?

    பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தனது கடிதத்தில் தெரிவித்திருந்தவாறு, 21 வருடங்களாக இப்பள்ளிவாசல் இயங்கி வருகிறது எனக் குறிப்பிட்டதும் பொய்யா?

    இப்பள்ளிவாசல் தாக்கப்பட்டதன் பின் ஊடகங்களில் கண்டன அறிக்கைகளும், பத்திக் கட்டுரைகளும் எழுதிய அத்தனை முக்கியஸ்தர்களும், கட்டுரையாளர்களும் தெரிவித்த தகவல்கள் எல்லாமே பொய்யானவைதானா?

    என்ன இது புதுக் குழப்பம்? நம்மையே நாம் ஏமாற்றினோமா? அல்லது நாமெல்லாம் சேர்ந்து மற்றவர்களை ஏமாற்ற முயற்சித்தோமா?

    உண்மையில் இக்கடிதப்படி உள்ள கூற்றுக்கள்தான் உண்மையெனில் சம்பந்தப்பட்ட ஸ்தாபகத் தலைவர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிது அவசியமாகும்.

    இன்றேல் ஜனாதிபதி முஸ்லிம் தனிநபர்களின் தவறுகளை சமூகத்திற்கான தாக்குதல்களின்போது சுட்டிக்காட்டி நியாயம் கற்பிக்க முயன்றதைப் போன்று இந்தப் பள்ளிவாசல் தாக்குதல் மற்றும் மூடப்பட்டது பற்றிய விடயமும் ஒரு வரலாற்றுச் சம்பவமாகப் பதிவாகி விடும்.

    எல்லாமே பெரும் புதிராக உள்ளது. இதுவிடயத்தில் ஜப்னா முஸ்லிம் உண்மைத் தகவல்களை விரைந்து வெளியிட வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. என்ன நடக்கின்றது மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இது யார் செய்த சதி உண்மையில் இதுபோன்ற செய்திகளில் உண்மைத்தன்மையை அறிந்து கண்டிக்கவேண்டிய விடயம் இந்த நாட்டில் சகல இன மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். உண்மையில் சகோதர் சீனி முகம்மது எழுதிய கடிதத்தின் பிரதி பிரசுரிக்கப்படாமல் அவர்கள் நினைத்தபடியெல்லாம் செய்திகளை வெளியாக்குவதனால் இனிமேல் இதுபோன்ற செய்திப்பத்திரிகைகளை வாங்குவதிலிருந்து மக்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

    ReplyDelete
  4. அப்படிதான் அவர் கடிதம் கொடுத்திருந்தாலும் அதில அவர் தனது கடையை பள்ளியாகப்பயன்படுத்தவில்லை என்றுதான் கூறுகின்றாரே தவிர அவர் பள்ளியைப்பற்றிக் கூறவில்லை என்பதை புத்தியுள்ள யாரும் புரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.