மாகாணசபை அதிகாரங்களை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்க நான் தயாரில்லை
மாகாணசபையின் அதிகாரங்களை இல்லாதொழிக்கும் எந்த ஒரு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்க தாம் தயாரில்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், 13வது அரசியல் அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வர அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில், இரண்டு மாகாணசபைகள் இணைவது மற்றும் மத்திய அரசாங்கத்தின் யோசனைகளுக்கு குறைந்த மாகாணசபைகளின் அனுமதி போதுமானது என்ற யோசனைகளே அவையாகும்.
இந்தநிலையில் இரண்டு மாகாணசபைகள் இணைவதை தடுப்பதற்கான யோசனைக்கு தாம் ஆதரவளிக்கின்ற போதும் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைக்கும் எந்த அரசாங்கத்திலும் தாம் அங்கம் வகிக்கப்போவதில்லை என்று வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். sfm
He has backbone.
ReplyDeleteஅதாவது, மனிதாபிமானம் இல்லாத வீட்டில் மனிதனாகக் குடியிருக்க மாட்டென் என்கிறீர்கள்!
ReplyDeleteஇது எங்களின் சமூகத்து மடச்சாம்பிராணிகளுக்கு விளங்க மாட்டேன் என்கிறதே..!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Your message is very clear. Provincial minister must understand this along with Dugles. We salute you Hon fire brand Vaasu, we need you, your voice must stir the sleeping ministers in the North and East. We will see what they say after getting votes from North East to safeguard the rights of minorities.
ReplyDelete