Header Ads



'ரமழான் முத்துக்கள் - புனித ரமழான் அறிவுப்போட்டி 2013'

"Association of Muslim Youth of Sailan" அமைப்பு ஜப்னா முஸ்லிம் இணையம் ஊடாக நடாத்தும் ரமழான் முத்துக்கள் - புனித ரமழான் அறிவுப்போட்டி - 2013

'ரமழான் முத்துக்கள் - புனித ரமழான் அறிவுப்போட்டி 2013' கேள்விகள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நாட்களில் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் தினமும் வெளியாகும். இணையத்தின் மேல் பகுதியில் உள்ள 'ரமழான் முத்துக்கள்' பகுதியை கிளிக் செய்வதன் மூலம் தினமும் கேட்கப்படும் கேள்விகளை அறிந்துகொள்ளமுடியும்.

போட்டி நிபந்தனைகள்

1. 14 வயதுக்கு மேற்ப்பட்ட ஆண் ,பெண் இரு பாலாரும் கலந்து கொள்ளலாம்.
2. ஒருவர் ஒரு விடை பத்திரம் மட்டும் அனுப்ப வேண்டும்.
3. ஒருவர் எழுதிய விடையை பார்த்து எழுதக்கூடாது. போட்டோக் கொப்பி (Photo copy) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
4. விடைகள் யாவும் தரப்பட்டுள்ள கட்டுரைக்குள்ளேயே இருக்க வேண்டும்.
5. விடைகள் யாவும் தெளிவாக இருப்பதுடன் உங்களது முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன குறிப்பிடப்படவேண்டும்.
6. கேள்வியை எழுதி விடையை எழுதலாம் அல்லது கேள்வி இலக்கத்தை மட்டும் குறிப்பிட்டு பதிலை மட்டும் எழுதலாம்.
7. 58 விடைகளையும் 20.08.2013ம் திகதிக்கு முன் மொத்தமாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
8. விடைகள் யாவும் தபால் மூலம் அல்லது E mail  மூலம் அனுப்பி வைக்கப்படவேண்டும்.
9. ஒரு குடும்பத்தில் எத்தனை பேரும் பங்கு பற்றலாம்.
10. குலுக்கல் முறையே வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
11. விடைகள் அனுப்ப வேண்டிய முகவரி

தபால் மூலம்
AMYS,
149,Maligakanda Road, 
Colombo-10, 
Sri Lanka.

e mail மூலம்:
ramalanmuththukal@gmail.com

மேலதிக தகவல்களுக்கும் தொடர்புகளுக்கும்
   0778478123, 0772604964, 0776442970

No comments

Powered by Blogger.