காத்தான்குடிக்கு பொதுபல சேனாவை அழைப்பது பிரதேச மக்களை காட்டிக்கொடுக்கும் செயல்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
முஸ்லிம்களின் விரோதிகளான பொது பல சேனாவை காத்தான்குடிக்கு அழைத்து வருவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியிருப்பதானது காத்தான்குடியையும் பிரதேச மக்களையும் காட்டிக் கொடுக்கும் செயலாகும்- மட்டு மு.மா.உ என்;.கே. றம்ழான்
பொது பல சேனா என்ற முஸ்லிம்களின் விரோதிகளை காத்தான்குடிக்கு அழைத்து வந்து காத்தான்குடியையும் பிரதேச மக்களையும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காட்டிக் கொடுக்க முயற்சிப்பதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்;.கே. றம்ழான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக முஸ்லிம்களின் செயற்பாடுகளை முழுக்க முழுக்க கேவலப்படுத்தி அல்லாஹ் என்ற புனிதமான சொல்லை பன்;றியின் உருவத்தில் எழுதி ஊர்வலம் எடுத்து பள்ளிவாயல்களை உடைத்து, பாங்கு சொல்வதற்கு தடையை ஏற்படுத்தி, பர்தாக்களை களைந்து, பாடசாலை சீருடையில் சர்ச்சையை உண்டுபன்னி, ஹலால் சான்றிதழ்களை இரத்து செய்து, காதி நீதிமன்றத்திற்கு தடையை விதிக்கக்கோரி, மார்க்க கடமைக்காகவும் இறைச்சிக்காகவும் கால் நடைகளை அறுப்பதற்கு தடையை கொண்டு வந்து, வியாபார நிலையங்களுக்கு தீவைத்து, ஹஜ் செய்வதை நிறுத்த முயற்சித்து, இறைச்சிக்கடைகளை முற்றுகையிட்டு, பொருளாதாரங்களை தீட்டுக் கொழுத்தி, உலமாக்களையும், ஜம்இய்யத்துல் உலமா சபையையும் மிக கேவலமாக விமர்சித்து இன்னும் பல்வேறு அநீதிகளையும் இன்னல்களையும் முஸ்லிம்களுக்கு இன்றுவரைக்கும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பொது பல சேனா என்ற முஸ்லிம்களின் விரோதிகளை அழைத்து வந்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி மண்னையும், மக்களையும் காட்டிக் கொடுப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
தம்புள்ள பள்ளிவாயல் உடைப்பு தொடக்கம் தங்கல்ல இறைச்சிக்கடை தீவைப்பு வரையும் எத்தனையோ அநீதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தவோ அல்லது குரல் கொடுக்கவோ முடியாது. வேடிக்கை பார்த்துக் கொண்டு வாய்மூடி மௌனமாக இருந்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்த அநீதிகளை இழைத்தவர்களை நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடிக்கு வருமாறு அழைப்பு விடுக்க போவதாக கூறுவது காத்தான்குடியையும், காத்தான்குடி முஸ்லிம்களையும,; உலமாக்களையும், தவ்வா அமைப்புக்களையும் காட்டிக் கொடுக்கின்ற ஒரு நடவடிக்கையாகும்.
பிரதியமைச்சரினால் வழங்கப்படும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக எமது ஊரின் கண்னியத்தையும் கௌரவத்தையும் தாரைவார்ப்பதற்கும் இந்த நாட்டு முஸ்லிம்களின் விமர்சனத்திற்கும் எமது கண்னியமிக்க உலமாக்கள், பள்ளிவாயல் தலைவர்கள், தஃவா அமைப்புக்கள் ஒரு போதும் துணைபோகக் கூடாது.
முஸ்லிம்களுக்கு எதிராகவும் நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் பொது பல சேனா என்ற காவியுடை கடும்போக்காளர்களை தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு அப்பால் பல பௌத்த அமைப்புக்களின் தேரர்களும், சில பௌத்த இன அமைச்சர்களும் இன்னும் சில அரசியற் கட்சிகளும் மிகவும் கடுமையாக விமர்சித்தும் குரல் கொடுத்தும் வருகின்ற இக்காலகட்டத்தில் பொது பல சேனாவை காத்தான்குடிக்கு வருமாறு அழைப்பு விடுக்க போவதாக தெரிவிப்பதானது முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களது செயற்பாடுகளை பிரதியமைச்சர் அங்கீகரிப்பதற்கு சமமானதாகும்.
பட்டம் பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்து செயற்பட மாட்டேன் தனது பிரதியமைச்சுப் பதவியை தூக்கி எறியும் சந்தர்ப்பம் வந்தால் அதையும் செய்யத் தவற மாட்டேன் என்றும் பொது பல சேனா என்ற பௌத்த அமைப்பு மீண்டும் முஸ்லிம்கள் விடயத்தில் கடும் போக்கை கையாளுவதற்கு எத்தனித்துவருவதாகவும் முஸ்லிம் சமூகம் பாரிய சவால்களை எதிர் நோக்கிவருவதாக கடந்த மாதம் காத்தான்குடியில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது குற்றம் சாட்டிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அதே அநியாயக்காரர்களான பொது பல சேனாவை நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப் போவதாக தெரிவிப்பது வேடிக்கையானது.
எனவே எவருடைய அரசியல் இலாபங்களுக்காவும் பட்டம் பதவிகளுக்காகவும் காத்தான்குடி மண்னைக் காட்டிக் கொடுக்க உலமாக்களும், தஃவா அமைப்புக்களும், பள்ளிவால் தலைவர்களும், புத்தி ஜீவிகளும் இடமளிக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.
ப்பூ..!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-