Header Ads



உலகில் எந்த நாட்டுக்கும் செல்வோம், எவரும் கேள்வி கேட்க முடியாது - பொதுபல சேனா


(Un) பொதுபலசேனா அமைப்பின் அமெரிக்க மற்றும் நோர்வே பயணங்கள் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாம் உலகில் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்வோம். எவருடனும் பேச்சு நடத்துவோம். அது குறித்து எம்மிடம் எவரும் கேள்வி கேட்க முடியாது என்று அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பு நோர்வேயிலுள்ள நிறுவனமொன்றிலிருந்து நிதியைப் பெற்று, இங்கு முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகின்றது என்றும், அந்த அமைப்பின் அமெரிக்க மற்றும் நோர்வே பயணங்கள் அதன் வலையமைப்பை சர்வதேச மயப்படுத்துவதற்காகவே என்றும் எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இவ்வாறான நிலையிலேயே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

"அண்மைக்காலமாக எமக்கெ திராகப் போராட்டங்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நாம் எதற்கும் அஞ்சப் போவதில்லை.   எமது அமைப்பின் அமெரிக்க மற்றும் நோர்வே பயணங்கள் குறித்தும் பலரும் பலவாறாகக் கருத்துக் கூறுகின்றனர். நாம் மேற்குலக நாடுக ளிடமிருந்து நிதி பெறுவதாகவும் குற்றஞ்சாட்டினர். 

இவை அனைத்தும் பொய். எமது அமைப்பின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், எமக்கெதிராக இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். 

இலங்கையில் வாழும் பௌத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அமெரிக்க மற்றும் நோர்வே முதலான நாடுகளிலுள்ள பௌத்த குரு மார்கள், பௌத்த அமைப் பினர் ஆகியோரைத் தெளிவுபடுத்தவும், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவுமே நாம் அங்கு சென்றோம் என்றார் ஞானாசார தேரர்.

10 comments:

  1. இது உண்மையான பயங்கரவாதச்செயல் இவர்கள்தான் உண்மையான பயங்கரவாதி பாதுகாப்பு அமைச்சர் நிரபராதியான ஆசாத்சாலியை கைது செய்து தனது சுயபழிவாங்கலுக்காக விசாரணை என்ற பெயரில் 8 நாட்கள் மிகவும் காட்டுமிராண்டித்தனமான வேலைசெய்தார் ஆனால் தற்போது கல்கொட அத்தே ஞானசேர சொல்வதுதான் நாட்டி அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடிய செயல் ஆகவே இதுபோன்ற பயங்கரவாதிகளை கண்டிப்பாக கைது செய்யவேண்டும் அனைவரும் இதை உரக்கச்சொல்லி இவரை கைது செய்யும் வரை கோசமிருவோம்........

    நாளுக்கு நாள் நேரத்திற்கு நேரம் இவர்களது பேச்சு மாறுபடுகின்றது ஆனால் எல்லோரும் உன்னிப்பாகக்கவனிக்கவேண்டிய விடயம் பொதுபலசேனவுடன் சம்மந்தப்பட்டவர்கள் நாட்டில் ஏதோ பாரியதோரு பயங்கரவாதச்செயல்பாட்டிற்று உள்வாங்கப்ப்டுள்ளார்கள். இதை நாட்டுமக்களாகிய நாம் முறியடித்து இப்பயங்கரவாதிகளை அடியோடு அழிக்கவேண்டும்.

    ReplyDelete
  2. முடிந்தால் சவூதிக்கு செல்லுங்கள் பார்க்கலாம்....?

    ReplyDelete
  3. கோதாபே இருக்கும் வரைக்கும் உங்களுக்கு பிரச்சினை இல்லை முஸ்லிம்களுக்குதான் பிரச்சினை உங்களுடைய சதி வலையில் நீங்களே ஒரு நாள் மாட்டும் போது உலகம் உங்களை பார்த்து சிரிக்கும் நீங்கள் அனைவரும் கேவலப்படுவீர்கள்

    ReplyDelete
  4. நீங்கள் புத்த பெருமானின் போதனையை 100 வீதம் நேர்த்தியாக பின்பற்றுபவர்....சிறுபான்மை இன மக்கள் இங்கு அதி உச்ச சௌகரியத்துடன் வாழ்கின்றனர்..?? அதனால் தான் இங்கு வாழும் பௌத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி தெளிவுபடுத்த அமெரிக்கா சென்றீர்கள்...இது நாட்டு ஜனாதிபதியையும்,பாதுகாப்பு செயலாளரையும் பாதுகாப்பு படையினரையும் அவமதிக்கும் செயலில்லையா.....???

    ReplyDelete
  5. Intha kadppaana pechchi intha arasaankam irukkum varaikum thaan. Piraku odi olinthu viduvaarkal.

    ReplyDelete
  6. Vandutanyaaaaa Vibrationu.....

    ReplyDelete
  7. நீ இஸ்லாத்தைப் பின்பற்றுவதுமில்லை, பின்பற்றுபவர்களுக்கு பின்பற்ற விடுவதுமில்லை.
    நீ பௌத்த மதக் கட்டுப்பாடுகளைப் பேணி நடப்பதுமில்லை. பௌத்த மதக் கட்டுப்பாடுகளைப் பேணி நடப்பவர்களை விடுவதுமில்லை.
    நீ (மக்களுக்குத் தெரிய மட்டும்- உள்நாட்டில் மட்டும்) இறைச்சிக்கறி சாப்பிடுவதுமில்லை. சாப்பிடுபவர்களை சாப்பிட விடுவதுமில்லை
    உனக்கு சிறந்த உதாரணம் வைக்கோலில் இருக்கும் நாய். அது வைக்கோல் உண்ணுவதுமில்லை. உண்பவைகளுக்கு உண்ண விடுவதுமில்லை.

    ReplyDelete
  8. கலகொட உனக்கு ஆப்பு அரசாங்கத்தாலதான் கிடைக்கும் என்று சொன்னது ஞாபகமிருக்கா. உன்னால கோத்தாபாயவுக்கு கோத்தபாயவால உனக்கும் இன்னும் எவ்வளவோ இருக்கு நாங்கள் பார்க்கவேண்டிய விளையாட்டுக்கள். இது பொய்யல்ல நிஜம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

    ReplyDelete
  9. இலங்கை ஒரு பௌத்த நாடாக இருந்தும், அரசியல் யாப்பின் பிரகாரம் பாதுகாக்கப்படுகின்ற சமயமாக பௌத்தம் இருந்தும், அரசின் உயர் தலைவர்கள் அனைவரும் பௌத்தர்களாக இருந்தும் இலங்கையில் உள்ள பௌத்தர்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காக இவர்கள் மேற்கு நாடுகளுக்குச் சென்று வருவதோடு மட்டுமல்ல, அவ்வாறு இன்னமும் செல்வோம், யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அறைகூவல் விடுவது உண்மையில் இலங்கை அரசையும், அதன் தலைவர்களையும் பௌத்த மத பீடங்களையும் காட்டிக் கொடுக்கும் ஒரு தேசத் துரோகச் செயலாகும். சொந்த சமூகத்தையே காட்டிக் கோடுக்கும் இவர்கள் தேசத்தைப் பொறுத்தவரை தமிழ் டயஸ்போராவையும் விட பயங்கரமானவர்கள். இவர்களை உடனடியாகவே தேசத் துரோகக் குற்றத்துக்காக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.

    ReplyDelete
  10. இவேன் ஒரு பைத்தியக்காரன் அப்பா கதையை உட்டு போடுங்கப்பா.

    ReplyDelete

Powered by Blogger.