முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பலவீனப்படுத்தும் திட்டத்தின் வெளிப்பாடு - கலாநிதி அனீஸ்
மன்னார் பிரச்சினைக்கு முழுமையாக பதில் சோல்ல வேண்டியவர்கள் சர்வதேச சமூகமும், இலங்கை அரசுமே. காரணம் 1990 ஆம் ஆண்டில் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 5 நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் சர்வ தேச சமூகமும், அரசாங்கமும் கரிசனை காட்டவில்லை.
கலாநிதி எம். எஸ். அனீஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறை முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார். இவர் வன்னி தேர்தல் மாவட்ட வவுனியாவைச் சேர்ந்தவர்.
வன்னித் தேர்தல் மாவட்டத்திலே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு நிர்வாக மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி மீனவத்துறை விவகாரம் நாட்டில் சூடுபிடித்துள்ள நிலையில் நாம் கலாநிதி அனீஸை சந்தித்து உரையாடினோம்.
முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக விசாரித்து ஆராந்து அறிக்கையொன்றினைத் தயாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். இன்றைய நிலையில் மன்னார் விவகாரத்தையடுத்து இவ் ஆணைக்குழுவை உடனடியாக நியமிப்பதற்கு அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றார்.
அவருடனான நேர்காணலை இங்கே தருகிறோம்.
விடிவெள்ளி : மன்னார் உப்புக்குளம் - கோந்தைப்பிட்டி மீனவத்துறை பிரச்சினையில் அமைச்சர் ரிசாத் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதே?
கலாநிதி அனீஸ் : அமைச்சரை சம்பந்தப்படுத்தியுள்ளமைக்கு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு சமூகப் பிரிவினர் மன்னார் மாவட்டத்தை தங்களின் முழுமையான ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். இதற்கு சர்வதேச சமூகமும், மேற்கத்திய சமூகமும் மறைமுகமாக ஆதரவு வழங்கியுள்ளது.
மன்னார் மாவட்டத்தை தமது மேலாதிக்கத்துக்குள் வைத்துக் கொள்ள விரும்பும் சமூகத்துக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சவாலாக அமைந்துள்ளது. இதனால், மீள்குடியேற்றத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நடவடிக்கைகளில் ஒன்றுதான் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி பிரச்சினை.
விடிவெள்ளி : மன்னார் பிரச்சினைக்குப் பதில் சோல்ல வேண்டியவர்கள் யார்?
கலாநிதி அனீஸ் : மன்னார் பிரச்சினைக்கு முழுமையாக பதில் சோல்ல வேண்டியவர்கள் சர்வதேச சமூகமும், இலங்கை அரசுமே. காரணம் 1990 ஆம் ஆண்டில் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 5 நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் சர்வதேச சமூகமும், அரசாங்கமும் கரிசனை காட்டவில்லை. பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள் புத்தளம் உட்பட ஏனைய மாவட்டங்களில் அகதிகளாக வாழ்ந்து மீள்குடியேற முடியாது அவதிப்படுகிறார்கள். இவர்களின் மீள்குடியேற்றத்துக்கு அரசினதும் சர்வதேச சமூகத்தினதும் ஆதரவு தேவை. இந்த இரண்டு பிரிவினராலும் இந்தச் சமூகம் கைவிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள், வாழ்வியல் உரிமைகள், கோந்தைப்பிட்டியில் பகிரங்கமாக மறுக்கப்பட்டுள்ளன. கவலைக்குரிய விடயம் என்னவென்றால் முஸ்லிம்களின் இத்தகைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டும் மனித உரிமை அமைப்புகள் மௌனமாகவே இருக்கின்றன. குரல் கொடுக்கவில்லை.
விடிவெள்ளி : அமைச்சர் ரிசாத்தினால் மீள்குடியேற்றப் பணிகளைத் தனியாக முன்னெடுக்க முடியாது என்கிறீர்களா?
கலாநிதி அனீஸ் : ஆம். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர். இவர் அப்பிரதேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். இவர் மாத்திரம் தான் மீள்குடியேற்றப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு (க்ஏஇகீ) வழங்கும் உதவிகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்களை பழைய அகதிகள் என பட்டியலிட்டு ஒதுக்கியுள்ளது. மீள்குடியேற்றப் பணிகளை முன்னெடுப்பதற்கு அரசு சர்வதேச சமூகத்தையே நம்பியுள்ளது. தனியாக இப் பணியை அரசினால் செய முடியாது. நிதி தேவைப்படுகிறது. எனவே அரசாங்கத்தினாலும் முஸ்லிம்களுக்கு உதவி செய முடியாத நிலையை நான் பார்க்கிறேன். அமைச்சர் தன்னாலான முயற்சிகளைச் செது வருகிறார். இம்முயற்சி வெற்றியளிக்கக் கூடியதாக இல்லை.
கிடைக்கும் இந்திய மற்றும் சர்வதேச உதவிகள் தமிழ் மக்களை மாத்திரமே சென்றடைகிறது. இந்தியா வழங்கியுள்ள 50 ஆயிரம் வீடுகள் அடங்கிய வீடமைப்புத் திட்டத்தை பெற்றுக் கொள்ள முஸ்லிம்கள் போராட வேண்டியுள்ளது.
விடிவெள்ளி : மன்னாரில் முஸ்லிம்களின் மீள்குடியேறுவதை தடுப்பதற்கான ஏற்பாடே அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு என்கிறீர்கள். இதனை சர்வதேசமயப்படுத்த வேண்டும் என்கிறீர்களா?
கலாநிதி அனீஸ் : இல்லை. குறிப்பிட்ட சமூகம் செததை நாம் செய வேண்டியதில்லை. மாந்தை, சன்னார் கிராமத்தில் அரச காணியில் அமைச்சர் ரிசாத் 50 முஸ்லிம் குடும்பங்களை குடியேற்ற முயற்சித்த போது இது அடாவடித்தனம், காணி அபகரிப்பு என சர்வதேச மயப்படுத்தப்பட்டது. நாம் சர்வதேசமயப்படுத்த வேண்டியதில்லை. அவ்வாறு சர்வதேசமயப்படுத்தினால் அரசியல் லாபம் தேடுபவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதாக அமைந்து விடும்.
மன்னாரில் மட்டுமன்றி முழு இலங்கையிலும் தமிழ், முஸ்லிம் உறவுகளைச் சீர்குலைத்து ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் லாபம் பெற்றுக் கொள்ள விரும்புகின்ற ஒரு சில பிரிவினர் தொடர்ச்சியாக இந்நாட்டில் இயங்கி வருகிறார்கள் என்பதை பிரச்சினையுடன் தொடர்புபட்ட சகல தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டுமென நான் நினைக்கிறேன்.
விடிவெள்ளி : மன்னார் பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் உறவுகளை எவ்வாறு பலப்படுத்த முடியும் எனக் கருதுகிறீர்கள்?
கலாநிதி அனீஸ் : தமிழ் சமூகத்தின் ஆதரவினைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ், முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேச வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கிறது.
குறுகிய இலாப நோக்கின் அடிப்படையில் செயற்படும் ஒரு சில அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் அல்லது சமூகத் தலைவர்களின் கைகளில் மாத்திரம் தமிழ், முஸ்லிம் உறவுகளைத் தீர்மானிக்கும் விடயத்தை ஒப்படைத்து விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களாக இருந்தால் அது அவர்கள் இரு சமூகங்களுக்கும் செயும் துரோகமாகும்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக த. தே. கூட்டமைப்பு எவ்வாறு தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றதோ அதேபோன்று இப்பிரதேசத்து முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டுமென்பது முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
சிலவேளை இவ்வாறான தமிழ், முஸ்லிம் உறவுகளில் ஏற்படுகின்ற விரிசல்கள் தொடருமாக இருந்தால் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தமது நிலைப்பாட்டினை முஸ்லிம் கட்சிகளும் அரசியல் தலைமைத்துவங்களும் மீள் பரிசீலனை செய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படும். வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களுக்கு இவ்வாறான ஒரு சில தீய சக்திகளினால் தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுமாக இருந்தால் மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய வேண்டும் என்ற விடயம் தொடர்பில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இலங்கை இனப்பிரச்சினைக்கான எந்த நிரந்தர அரசியல் தீர்வையும் முஸ்லிம்களினதும் ஆதரவுடனேயே எட்ட முடியும் என்பதை த. தே. கூட்டமைப்பு ஒரு போதும் மறந்து விட முடியாது.
விடிவெள்ளி : அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
கலாநிதி அனீஸ் : அவர் நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் குற்றவாளியா, குற்றமற்றவரா என்பதைத் தீர்மானிப்பது நீதித் துறையின் பொறுப்பு. அது தொடர்பாக எந்தக் கருத்துக்களையும் என்னால் முன்வைக்க முடியாது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமென்றால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேவேளை சமூக உரிமைக்காகக் குரல் கொடுத்து வருபவர் என்பதற்காக மாத்திரம் ஒருவர் அநியாயமாக தண்டிக்கப்படுவதையும் இந்த முஸ்லிம் சமூகம் ஒரு போதும் அங்கீகரிக்காது என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
விடிவெள்ளி : மன்னாரில் ஒரு மதப் பிரிவினர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்கிறீர்களா?
கலாநிதி அனீஸ் : தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்பதை நான் ஏற்க மாட்டேன். அரைவேக்காடு அரசியல்வாதிகளினாலே இவ்வாறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது. ஒரு சில ஊடகங்களும் தர்மத்துக்கு விரோதமாக சமூகத்தின் மத்தியில் பிரசாரம் செகின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 15 ஆயிரம் தமிழ் மக்கள் வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு கிடைத்ததை விட கூடுதலான விருப்பு வாக்குகள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே கிடைத்துள்ளது. எனவே, அங்கு தமிழ் மக்களின் ஆதரவு அதிகமாக இருந்திருக்கிறது.
அமைச்சர் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் காட்டிய ஆர்வமே இதற்குக் காரணமாகும். தமிழ் மக்களின் ஆதரவு அவருக்குக் கிடைத்ததால் த. தே. கூட்டமைப்பு அதிருப்தியடைந்துள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்ற முஸ்லிம் அபேட்சகர்கள் மூவரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே. 1981 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி மன்னார் மாவட்டத்தில் 25 வீதமானோர் முஸ்லிம்களாவர். இவ்வருடம் நடைபெற்ற குடிசன மதிப்பீட்டின் படி முஸ்லிம்களின் விகிதாசாரம் அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சீராக இடம்பெற்றால் இவ்வீதம் 35 ஆக உயர்வடைந்து விடும். இதனை ஒரு சமூகப் பிரிவினர் விரும்பவில்லை. இம்மாவட்டத்தை தமது முழுமையான ஆதிக்கத்தின் கீழேயே வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.
விடிவெள்ளி : இந்தியாவும், சர்வதேச சமூகமும் மீள்குடியேறும் முஸ்லிம்களைப் புறக்கணிக்கிறது என்கிறீர்கள். ஏன் அரபு நாடுகளிடம் உதவிகளைக் கோர முடியுமல்லவா?
கலாநிதி அனீஸ் : முஸ்லிம் அமைச்சர்களினால் அரபு நாடுகளை உதவிகளுக்காக நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது. நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்ள அரசு விரும்புவதில்லை. இதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
விடிவெள்ளி : மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் நிலை சுமுகமாக இருக்கிறதா?
கலாநிதி அனீஸ் : மன்னாரில் முஸ்லிம்கள் பீதியுடனே யே வாழ்கிறார்கள். அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. மீள்குடியேறிய பல முஸ்லிம்கள் மீண்டும் புத்தளத்தை நோக்கி நகர்கிறார்கள். இதனை அனைத்து தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
First of all before criticizing the government for failure for resettlement this person should know that Rishard is the cabinet minister of the same government and he has a very close relation with Basil Rajapaksa. he can do what ever he wish. This minister should have done all the settlement without any issue. Also this Dr has said Rishard cannot ask help from Arab world, then how did he ask help from arab world to support mahinda in Geniva voting? if he can do that why can not he ask help for muslim re settlement
ReplyDeleteI really regret to see this situation on the issue of Northern Muslims after 22 years of sufferings.
ReplyDeleteNorthern Muslims need no criticism or explanations, but justice for their sufferings for the last 22 years for reason Tigers only knew. Its not a matter to discussion but to rectify by putting them in the righteous place.
The only reason for the ethnic cleansing was that they are followers of Islam.
This is totally against this country's constitution of Fundamental and Human rights including the right to chose and practice one Religion any where in this country.