Header Ads



தனியாக கடைக்கு செல்லும் பெண்கள் கைது செய்யப்படுவார்கள்

ஆண்கள் துணையில்லாமல், தனியாக கடைக்கும் செல்லும் பெண்களை கைது செய்ய, பாகிஸ்தானில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானையொட்டிய கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். தலிபான்கள் பலர் இப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

பெண்கள் பள்ளிக்கூடம் செல்வது போன்றவை இந்த மாகாணத்தில் குற்றமாக கருதப்படுகிறது. இதற்கிடையே, ரம்ஜானையொட்டி செராய் நவுரங் என்ற நகரில் அந்த பகுதி பழங்குடி தலைவர்கள், டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இதன் படி "ரம்ஜானுக்கு, எந்த பெண்ணும், ஆண் துணையில்லாமல், கடைக்கு செல்லக் கூடாது. மீறி செல்லும் பெண்கள், கைது செய்யப்படுவார்' என, இந்த கூட்டத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு இப்பகுதி டி.எஸ்.பி.,யும் ஒப்புக்கொண்டுள்ளார். செராய் நவுரங் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் கன்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.