சவூதி அரேபியாவில் புத்தரை வழிபட்ட இலங்கையரை பார்க்க, மனைவிக்கு இலவச டிக்கட்
சவூதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையரின் உண்மை நிலையை அறிந்து வருவதற்கு குறித்த நபரின் மனைவிக்கு இலவசமாக விமான டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொடுக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் நடவடிக்கை எடுத்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சவூதியின் றியாத் நகரில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். புத்தர் சிலையை வைத்து வழிபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பதியத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த பி. பி. துங்கசிறி என்பவர் சவூதியில் கைது செய்யப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், வேறு குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப் பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவை, துங்கசிறியின் மனைவி சந்தித்திருந்தார். இச்சந்திப்பின் போது தனது கணவரின் கைதுக்குக் காரணம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் பற்றி அமைச்சரிடம் அவர் கலந்துரையாடியிருந்தார்.
இதற்கமைய, சவூதிக்குச் சென்று கணவரின் கைதுக்கான காரணத்தை அறிந்து வருவதற்கான விமானச் சீட்டுக்களை இலவசமாகப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் டிலான் பெரேரா இணக்கம் தெரிவித்தார். சவூதிக்குச் சென்று கணவரை நேரில் சந்தித்து அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை அறிந்து வருமாறும் அமைச்சர் கூறியுள்ளார். அதேநேரம், றியாத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் நபரின் விடுதலை தொடர்பில் சவூதியி லுள்ள இலங்கைத் தூதரத்தின் ஊடாக ஆராய்ந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்து ள்ளது. குறித்த நபர் தொடர்பில் றியாத் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டிருப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
உண்மை எதுவாக இருந்தாலும் ரஞ்சன் ராமநாயக போன்ற இன வாத கூத்தாடி அரசியல் வாதி நம்ப போவதில்லை
ReplyDeleteஒரு சிறந்த நடவடிக்கை....
ReplyDeleteயாருக்கு பயந்து குற்றத்தை மறைத்தாரோ அவரே நேரில் சென்று அறிந்து வரட்டும்....அத்தோடு அவரின் சக்கலத்தியையும் பார்த்து சுகம் விசாரித்து வரட்டும்.
துன்கஸ்ரீயின் மனைவி அவர்களே!
இந்த ஆத்துப்பேயன் லூசு ரஞ்சன் ராமநாயக வீசிய தூண்டிலில் அகப்படாமல் தப்பிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.
தற்போது துங்கஸ்ரீ புத்தரை வேண்டட்டும்,கோமாளி ரஞ்சன் ராமநாயக அனார்கலிக்கு பின்னாலையே நாயாட்டம் அலையட்டும்