Header Ads



ஈரானில் வங்கி மோசடி - 4 பேருக்கு மரண தண்டனை

ஈரானில் வங்கி மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

அணுஆயுத சர்ச்சையில் ஈரான் மீது ஐ.நா மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் ஈரான் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில், தேசிய வங்கியில் 2.6 பில்லியன் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடியில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக ஈரான் அதிபர் அகமதி நிஜாத்தின் நெருங்கிய நண்பர் எஸ்பான்டியர் ரகீம் மாஷிக்கு வங்கி மோசடியில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ஸ்டீல் கம்பெனி வர்த்தகர் அமிர் மன்சூர் கோஸ்ரவிக்கு வங்கி மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் மோசடி தொடர்பாக 39 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட் 4 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்றவர்களுக்கு 25 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.  தண்டனை பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

No comments

Powered by Blogger.