Header Ads



23 மில்லியன் முஸ்லிம்கள் வாழும் உஸ்பெகிஸ்தானில் இஸ்லாமிய திருமணத்திற்கு தடை

முஸ்லிம் உலகம்

தனிமனித மனித சுதந்திரத்தில் மிகக் கடுமையான சட்டங்களை கொண்டுவரும் நோக்கில் இஸ்லாமியத் திருமணங்களுக்கு உஸ்பெகிஸ்தான் அரசு தடைவிதித்துள்ளது. உஸ்பெகிஸ்தானில் இஸ்லாமியத் திருமணங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவதாக, இம்மாத ஆரம்பப்பகுதியில் உஸ்பெகிஸ்தான் நிபுணர் குழுவொன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உஸ்பெகிஸ்தானில் இஸ்லாமியத் திருமணங்களுக்கு தடைசெய்துள்ள அதேவேளை,வீடுகளில் நடைபெறும் திருமணங்களை கண்கானிப்தற்காக உள்நாட்டு அரச அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என உஸ்பெகிஸ்தான் அரசாங்கத்தின் மதவிவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிநிதி  ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அண்மையில் உஸ்பெகிஸ்தானில் மதரீதியான ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய ஆசியாவில் அதிக சனத்தொகை கொண்ட நாடாக உஸ்பெகிஸ்தான்  விளங்குகின்றது. இது புவியில்ரீதியில் சிறந்த அரசியல் நாடாகாவும் காணப்படுகின்றது. நாட்டின் மொத்த சனத்தொகையில்  88 சதவீதமானவர்கள்,அதாவது 23 மில்லியன்மக்கள் முஸ்லிம்களாவர்.

உலகில் பருத்தி உற்பத்தி செய்யும் நாடுகளில் முன்னணியில் உஸ்பெகிஸ்தான் நிற்கின்றதுடன்,பெருமளவில் இயற்கை எரிவாயுப் படிவுகளைக் கொண்ட நாடாகவும் காணப்படுகின்றது.இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற பிரச்சாரத்தின் மூலம் உஸ்பெகிஸ்தான் அரசாங்கத்தால் மதஉரிமைகள் நசுக்கப்பட்டுவருவதாக மனிதஉரிமை அமைப்புக்கள் குற்றம்சாட்டிவருகின்றன.

No comments

Powered by Blogger.