இலங்கையில் இஸ்லாமிய கிலாபத் - கலாசார மோதலை உருவாக்குமா..? பகுதி - 2
அஹ்மத் ஷா அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி )
சீர்திருத்த பணியும் இஸ்லாமிய அரசியல் கோட்பாடும்.
கிலாபா அடிப்படையானது என்பது ஷியாக்களின் நிலைப்பாடாகும் ,கிலாபா கிளை விடயம் என்பது அஹ்ளுசுன்னா உலமாக்களின் முடிவாகும் .கிலாபத் சம்மந்தமாக ஷீயா பிரிவினருக்கும் அஹ்ளுசுன்ன உலமாகளுக்கும் உள்ள வேறுபாடு சம்மந்தமாக எழுதப்பட்ட நூல்களை வாசித்து பார்க்கும்போதும், இப்போது உள்ள நிலையில் முஸ்லிம்களில் யாரை இமாமாக நியமித்தல்? இமாமை நியமித்தளுக்கான சூழல் இன்று இல்லை என்பதை நிகழ்கால அரசியல் நிலவரம் எடுத்து காட்டுகிறது.
அடுத்து மக்களின் நிலைப்பாடு எப்படி இருந்தது என்றால் "செவிமேடுத்தோம் கட்டுபட்டோம் " இப்போது தாவா என்பது இரு சாரார் சம்மந்தப்பட்ட விடயாமாகும் ,அழைப்பு பணியை மேற்கொள்ளும் ஒருசாரரும் ,அழைப்பு பணிக்கு உட்படுத்தப்படும் மருசாராரும் . இங்கு இரண்டில் ஒரு சாரார் பிழையான வழிமுறையில் இருந்தாலும் இஸ்லாமிய அரசியலை அடைய முடியாது.
இல்லை அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய நாடுகள் தமது வெளிவிவகார கொள்கையை மாற்றவேண்டும் ,ஆக்கிரமிப்பு செய்யப்பட பாலஸ்தீன் ,ஈராக் ,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து மேற்கத்தைய அரக்கர்கள் வெளியாக வேண்டும் .அப்படி என்றால்தான் சமாதானம் வரும் என்று நாம் மேற்கத்திய வாதிகளுக்கு அரசியல் சொல்லிகொடுப்போம்.
மக்கள் மனநிலை ஏற்ப அரசியல் நகர்வு
இன்று பெரும்பான்மையான மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் அதில் அதிகமானவர்கள் இஸ்லாமிய அடிப்படை விடயங்கள் கூட தெரியாமல் உள்ளனர்,சில முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இனி எப்போதும் குற்றவியல் சட்டம் கொண்டுவரமுடியாது என்று மேற்கத்திய கருத்தில் தாக்கப்பட்டுள்ளனர் ,இன்னும் சிலர் லெபரெல் தாராண்மை வாத கோட்பாட்டையும் மதச்சார்பற்ற கோட்பாடுகளையும் அங்கீகீகரிக்கின்றனர்,இதுபோக அகீதா ரீதியாக பலபிரிவாக பிரிந்துள்ளனர் .,ஷீயா சன்னி என்றும் பிரிந்து கிடக்கின்றனர்,சன்னிகள் பெரலவி,சூபி ,சலபி,இக்வான், ஜமாத்தே இஸ்லாமி என்று பலபிரிவினர்,இப்படியான சமுதாயத்தில் ஆட்சியில் யாரை வைப்பது,கிலாபத் இப்போதும் கடமை என்று சொல்லும் ஷியாக்கள் கூட பல பிரிவுகளாக பிரிந்துள்ளனர்.இப்படி இருக்கும் சமுதாயத்துக்கு ஆட்சி முக்கியமா?சீர்திருத்தபணி முக்கியமா? இப்படி பல பிரிவுகளாக உள்ள சமுதாயத்துக்கு தலைமை தாங்கும் ஒரு ஆட்சியாளர் எந்த மக்களின் கருத்துக்கு ஆதரவாக இருப்பார் ,பெரலவி ஒருவர் ஆட்சியில் அமர்ந்து மாற்றுக்கருத்தை சொன்னால் ஆட்சியில் அவர் எப்படி இருக்க முடியும்,அல்லது ஷீயாவை சேர்ந்த ஒருவர் ஸஹாபாக்களை திட்டினாலோ ஆயிஷா ரழி அவர்களை விபச்சாரி என்று பிரச்சாரம் செய்தாலோ சன்னிகள் என்ன செய்ய முடியும் ?,இப்படியான காரணத்தினால்தான் இஸ்லாமிய அடிப்படையில் மக்கள் ஒன்றுபடும்போது ஆட்சியில் யார் இருப்பது என்ற பிரச்சினை மிகக்குரைவாக இருக்கும் மட்டுமல்லாது வெளியில் இருந்து வரும் தீய சக்திகளில் இருந்து இஸ்லாத்தை காக்க முடியும்,மக்கள் இஸ்லாமிய அடிப்படையில் ஒன்ருபடுவதன் மூலமாகத்தான் அதனை அடைந்து கொள்ள முடியும் .
களவெடுத்தவனின் கையை வெட்டுவது கடமை என்று இஸ்லாமிய குற்றவியல் சட்டம் சொல்கிறது .இதனை ஒரு சரியான சிந்தனையாளன் எப்படி விளங்க முடியும் ?சமகாலத்தில் கையை வெட்டும் சந்தர்பம் இல்லை என்பதால் அது கடமை இல்லை என்றுதான் ஒரு சரியான சிந்தனையாளன் கருதுவான்(ஒரு சில நாடுகளைத்தவிர ) ஒருவிடயம் கடமையாகுவதும் இல்லாமல் போவதும் இடத்துக்கு இடம் நேரத்துக்கு நேரம் மனிதருக்கு மனிதர் வேறுபாடும் ,நிலைமை சூழல்களுக்கு ஏற்ப சட்டங்கள் மாறும் இமாம் இப்னு தைமியா நாம் இன்று இருக்கும் சூழலில் இருப்பார் என்றால் இன்றுள்ள சமுதாயத்துக்கு கிலாபத் கடமை என்று சொல்வாரா? அவருடைய தாவா வழிமுறைகளை கவனமாக நோக்கும் ஒருவர் கிலாபத் இப்போது கடமை என்ற முடிவுக்கு அவர்வரமாட்டார் என்றுதான் சொல்வார் .
உசூளுள் பிக்ஹ் விதி அடிப்படையிலான அரசியல் நகர்வு
இஸ்லாமிய விழுமியங்கல் தெரியாமல் சீரழிந்து கிடக்கும் சமுதாயத்தை செவ்வனே செதுக்கி எடுப்பதன் மூலம் சந்தர்பத்தை அமைக்கலாம் ,கிலாபத்தை அடைவதற்கு முன் இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் ,எத்தனையோ நபிமார்கள் ,உலமாக்கள் தவ்ஹீதுக்கான தாவா பயனித்தில் மக்கள் சீர்திருத்த பணியைத்தான் தமது தலையாய கடமையாக செய்து வந்தார்கள் ,எனவே “அவ்லவியா” என்பது மக்கள் சீர்திருத்த பணிதான் என்பதில் சந்தேகமில்லை ,வீட்டுக்கு அவசரமாக போக வேண்டுமென்றால் படியில் அவசரமாக போக வேண்டும் ,கிலாபத் வேண்டுமென்றால் மக்கள் சீர்திருத்த பணி அவசரமாக நடைபெற வேண்டும் ,
மக்கள் சீர்திருத்த பனிக்குள் மக்களின் ஆன்மீக லவ்கீக விடயங்கள் அனைத்தும் உள்ளடங்கும் .
யார் தீனை நிலை நிறுத்தும்பணியை செய்வது சன்னிகளா? ஷீயாக்களா? பெரலவிகளா? காதியாநிகளா?சமுதாயம் இஸ்லாமிய அடிப்படையை விளங்க வேண்டிய கட்டாய தேவையில் உள்ளது ,இஸ்லாத்தை சரிவர விளங்காத காரணத்தால் பலபிரிவுகளாக பிரிந்து உள்ளனர் ,அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை தெரியாமல் கிலாபத்தை போதித்து என்னபயன் இருக்கிறது?
தொழுகை இல்லாதவனிடம் கிலாபத்தை அமைக்க பாடுபடுவோம் வா என்று சொல்லமுடியுமா?இறைவனைபற்றிய அறிவு இல்லாதவனிடம் கிலாபத் பற்றிபேசி என்ன பயன்? ஈமான் என்றால் என்ன என்று தெரியாதவரிடம் கிலாபத் பேசி என்ன பயன் ?இன்றய அரபு நாடுகளிலும் இஸ்லாமிய நாடுகளிலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் மற்றும் ஹிஜாப் போன்ற விடயங்கள் நமது சமுதாய பேர்வளிகலாலேயே விமர்சிக்கபடுகிறது அவர்களிடம் சென்று கிலாபத் பேசி என்ன பயன் ?
முதலில் முஸ்லிம் சமுதாயத்தை திருத்தும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட வேண்டும்,சீர்திருத்தம் பெற்ற முஸ்லிம்கள்தான் ஆட்சியை தலைமை தாங்க தகுதி உள்ளவர்களும் அந்த அமானித்தை ஓரளவேனும் தாங்கி கொள்ள கூடியவர்ளாவர் .
தொடரும் ....
பகுதி 1 http://www.jaffnamuslim.com/2012/06/2-8-69000.html

மதீனாவில் இஸ்லாமிய தேசம் வருவதற்காக நபியவர்களின் தாவா அணுகுமுறை எவ்வாறு இருந்தது என்பதை பார்க்கும்போது கிலாபத் எப்படி ஏற்படும் என்பது நமக்கு புலனாகும், நபியவர்கள் தமது சமுதாயத்தை சீரான அகீதா சீர்திருத்தத்தில் இருந்து ஆரம்பித்தார்கள்,இது எல்லா நபிமார்களின் நிலைப்பாடும் கூட.
அடுத்து மக்களின் நிலைப்பாடு எப்படி இருந்தது என்றால் "செவிமேடுத்தோம் கட்டுபட்டோம் " இப்போது தாவா என்பது இரு சாரார் சம்மந்தப்பட்ட விடயாமாகும் ,அழைப்பு பணியை மேற்கொள்ளும் ஒருசாரரும் ,அழைப்பு பணிக்கு உட்படுத்தப்படும் மருசாராரும் . இங்கு இரண்டில் ஒரு சாரார் பிழையான வழிமுறையில் இருந்தாலும் இஸ்லாமிய அரசியலை அடைய முடியாது.
இன்று உள்ள சூழலில் முஸ்லிம்கள் இஸ்லாத்தை பற்றிய அடிப்படை தெளிவில்லாமல் இருக்கும்பொழுது அவர்களுக்கு தேவையான இஸ்லாமிய அறிவு கொடுக்க படவேண்டும்,சரியான அடித்தளம் இல்லாத கட்டிடம் நிலைத்திருக்க மாட்டாது, எனவே சமகால சமுதாயம் சீர்பெற வீண்டும் என்றால் இஸ்லாத்தில் உள்ள 95% வீதமான பகுதியை ஆட்சி அதிகாரம் இல்லாமலே மக்களுக்கு எடுத்து சொல்ல முடியும் . மீதமுள்ள ஆட்சி சம்மந்தப்பட்ட விடயங்கள் 95% வீதம் பண்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு செல்லப்பட்ட கட்டளையாகும் ,சமகால பண்படுதபடாத சமுதாயத்துக்கு சொன்ன கட்டளை அல்ல.மாறாக அந்த கட்டளைகள் ஆட்சி சூழல் அமைந்த சமுதாயத்துக்கு உரியதாகும் .
அவ்வாறான சூழல் எப்படி வரும் என்றால் இஸ்லாத்தின் பெரும்பகுதியான 95% வீத விடயங்களை அவசரமாக முடுக்கிவிட்டு பிரச்சாரம் செய்யும்பொழுது வரும்,அதற்கு மாற்றமாக ஆட்சி ஆட்சி என்று வெறுமனே முழக்கம் இடுவதன் மூலமாக ஆட்சி வரப்போவதில்லை,சமாதானம் சமாதானம் என்று மேற்கத்தைய நாடுகள் கூக்குரல் இடுகின்றன ,அப்படி சொல்வதன் மூலம் சமாதானம் வந்துவிடுமா?
அவ்வாறான சூழல் எப்படி வரும் என்றால் இஸ்லாத்தின் பெரும்பகுதியான 95% வீத விடயங்களை அவசரமாக முடுக்கிவிட்டு பிரச்சாரம் செய்யும்பொழுது வரும்,அதற்கு மாற்றமாக ஆட்சி ஆட்சி என்று வெறுமனே முழக்கம் இடுவதன் மூலமாக ஆட்சி வரப்போவதில்லை,சமாதானம் சமாதானம் என்று மேற்கத்தைய நாடுகள் கூக்குரல் இடுகின்றன ,அப்படி சொல்வதன் மூலம் சமாதானம் வந்துவிடுமா?
இல்லை அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய நாடுகள் தமது வெளிவிவகார கொள்கையை மாற்றவேண்டும் ,ஆக்கிரமிப்பு செய்யப்பட பாலஸ்தீன் ,ஈராக் ,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து மேற்கத்தைய அரக்கர்கள் வெளியாக வேண்டும் .அப்படி என்றால்தான் சமாதானம் வரும் என்று நாம் மேற்கத்திய வாதிகளுக்கு அரசியல் சொல்லிகொடுப்போம்.
மக்கள் மனநிலை ஏற்ப அரசியல் நகர்வு
இன்று பெரும்பான்மையான மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் அதில் அதிகமானவர்கள் இஸ்லாமிய அடிப்படை விடயங்கள் கூட தெரியாமல் உள்ளனர்,சில முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இனி எப்போதும் குற்றவியல் சட்டம் கொண்டுவரமுடியாது என்று மேற்கத்திய கருத்தில் தாக்கப்பட்டுள்ளனர் ,இன்னும் சிலர் லெபரெல் தாராண்மை வாத கோட்பாட்டையும் மதச்சார்பற்ற கோட்பாடுகளையும் அங்கீகீகரிக்கின்றனர்,இதுபோக அகீதா ரீதியாக பலபிரிவாக பிரிந்துள்ளனர் .,ஷீயா சன்னி என்றும் பிரிந்து கிடக்கின்றனர்,சன்னிகள் பெரலவி,சூபி ,சலபி,இக்வான், ஜமாத்தே இஸ்லாமி என்று பலபிரிவினர்,இப்படியான சமுதாயத்தில் ஆட்சியில் யாரை வைப்பது,கிலாபத் இப்போதும் கடமை என்று சொல்லும் ஷியாக்கள் கூட பல பிரிவுகளாக பிரிந்துள்ளனர்.இப்படி இருக்கும் சமுதாயத்துக்கு ஆட்சி முக்கியமா?சீர்திருத்தபணி முக்கியமா? இப்படி பல பிரிவுகளாக உள்ள சமுதாயத்துக்கு தலைமை தாங்கும் ஒரு ஆட்சியாளர் எந்த மக்களின் கருத்துக்கு ஆதரவாக இருப்பார் ,பெரலவி ஒருவர் ஆட்சியில் அமர்ந்து மாற்றுக்கருத்தை சொன்னால் ஆட்சியில் அவர் எப்படி இருக்க முடியும்,அல்லது ஷீயாவை சேர்ந்த ஒருவர் ஸஹாபாக்களை திட்டினாலோ ஆயிஷா ரழி அவர்களை விபச்சாரி என்று பிரச்சாரம் செய்தாலோ சன்னிகள் என்ன செய்ய முடியும் ?,இப்படியான காரணத்தினால்தான் இஸ்லாமிய அடிப்படையில் மக்கள் ஒன்றுபடும்போது ஆட்சியில் யார் இருப்பது என்ற பிரச்சினை மிகக்குரைவாக இருக்கும் மட்டுமல்லாது வெளியில் இருந்து வரும் தீய சக்திகளில் இருந்து இஸ்லாத்தை காக்க முடியும்,மக்கள் இஸ்லாமிய அடிப்படையில் ஒன்ருபடுவதன் மூலமாகத்தான் அதனை அடைந்து கொள்ள முடியும் .
இருபதாம் நூற்றாண்டின் கிலாபத் புரட்ச்சி
இருபதாம் நூற்றாண்டில் வந்த ஒருசில அமைப்புக்கள் சமகாலத்தில் கிலாபத்தை கட்டாய கடமையாக கருதுகின்றது .இந்த அடிப்படையில்தான் ஹாகிமியத் என்ற கருத்தும் பரப்பப்பட்டு முஸ்லிம்களை காபிராக்கும் நிலைமை சில கிலாபத்வாதிகளால் முன்வைகப்பட்டது .
அகீதாவில் சீர்திருத்தம் பெறாத சமுதாயத்தில் கிலாபத் முன்னிறுத்தப்பட்டது ,இவர்கள் மனதளவில் நல்லவர்களாக இருந்தாலும் தாவா நகர்வுகளில் தவறிழைத்துவிட்டனர். நபிகளின் சீராவை சரியான முறையில் சீர்தூக்கி பார்க்க தவறிவிட்டனர், நபிகளின் மக்கா வாழ்கைக்கும் மதீனா வாழ்க்கைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை மறந்துவிட்டனர் ,அல்லது மறக்கடிக்க பட்டனர், அகீதா ஷரீயா சீர்திருத்தம் இல்லாத சமுதாயத்தில் கிலாபத் தங்கி நிலை நிற்காது என்பதையும் விளங்காதவர்கள், கிலாபத் என்ற குறிக்கோள் இவர்களை பல பிழையான முடிவுகளுக்கு இட்டு சென்றது .
லாயிலாக இல்லல்லாஹ் என்ற உயர்ந்த களிமாவுக்கு ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கும் இல்லை என்ற பிழையான கருத்தை நுழைத்தனர்.சிலபோது ஜனநாயகம் ஷிர்க் என்று சொன்னார்கள் ,சுன்னாவை சில்லறை பிரச்சினை என்றும் நாகரீகம் அற்ற முறையில் படுமோசமாக விமர்சனம் பண்ண துவங்கினார்கள். கிலாபத் என்ற பயணத்தில் அகீதா சீர்திருத்தம் ஷிர்க் ,கபுர்வணக்கம் போன்றவற்றை சாதரணமாக எடுத்துகொண்டார்கள் ,சில கிலாபத் வாதிகள் அறிவாளிகளின் பின்னணி இல்லாது சிந்தனையை சிதறவிட்டு நிலையான கொள்கை இன்றி தற்போது நடுநிலைமை என்று தத்தளிக்கின்றனர். கிலாபத் சம்மந்தமான பிழையான சிந்தனை ஏற்படுத்திய குழப்பங்கள் இவை.

கிலாபத் சம்மந்தமாக வரக்கூடிய ஏவல்கள் எல்லாமே எல்லா காலத்துக்கும் எல்லா சமுதாயத்துக்கும் பொருந்தாது ,யார் ஒருவர் அல்லாஹ்வின் சட்டத்தை ஆட்சியில் அமுல்படுதவில்லையோ அவன் காபிரவான் என்று இஸ்லாம் சொல்கிறது ,இப்போது இந்த கட்டளை எனக்கும் உங்களுக்கும் ,பிரிந்து கிடக்கும் சமுதாயத்துக்கும் சொல்லப்பட்ட கட்டளை அன்று ,யார் ஒருவர் அதிகாரத்தில் இருக்கிறாரோ அவருக்குரிய சட்டம் ,அதிகாரத்தை கொண்டுவருவதற்கு முன் செய்ய வேண்டிய கடமைகள் நம்முன்னால் அதிகமாக உள்ளன,நபியவர்கள் மக்களின் சீர்திருத்தபணியை முடித்தபின்பு அந்த மக்கள் நபியவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்தார்கள் அல்லாஹ்வின் ,நபியவர்களின் கட்டளைகளை செவிமேடுதோம் கட்டுபட்டோம் என்று சொன்ன சமுதாயதுக்குதான் ஆட்சி பொருத்தமாக அமைந்தது ,ஆனால் இன்று முஸ்லிம்கள் எப்படி உள்ளனர் ,அல்லாஹ்வின் கட்டளைகளை செவிமேடுதோம் கட்டுபட்டோம் என்ற நிலையிலா உள்ளனர்? நாம் சொல்லும் படிமுறையில் செல்லும்போதுதான் கிலாபத் என்பது சாத்தியப்படும்,இல்லை பிஞ்சை அடித்து பழுக்க வைக்க முயன்றால் ருசி எட்டா கனியாகதான் போகும் .
களவெடுத்தவனின் கையை வெட்டுவது கடமை என்று இஸ்லாமிய குற்றவியல் சட்டம் சொல்கிறது .இதனை ஒரு சரியான சிந்தனையாளன் எப்படி விளங்க முடியும் ?சமகாலத்தில் கையை வெட்டும் சந்தர்பம் இல்லை என்பதால் அது கடமை இல்லை என்றுதான் ஒரு சரியான சிந்தனையாளன் கருதுவான்(ஒரு சில நாடுகளைத்தவிர ) ஒருவிடயம் கடமையாகுவதும் இல்லாமல் போவதும் இடத்துக்கு இடம் நேரத்துக்கு நேரம் மனிதருக்கு மனிதர் வேறுபாடும் ,நிலைமை சூழல்களுக்கு ஏற்ப சட்டங்கள் மாறும் இமாம் இப்னு தைமியா நாம் இன்று இருக்கும் சூழலில் இருப்பார் என்றால் இன்றுள்ள சமுதாயத்துக்கு கிலாபத் கடமை என்று சொல்வாரா? அவருடைய தாவா வழிமுறைகளை கவனமாக நோக்கும் ஒருவர் கிலாபத் இப்போது கடமை என்ற முடிவுக்கு அவர்வரமாட்டார் என்றுதான் சொல்வார் .
உசூளுள் பிக்ஹ் விதி அடிப்படையிலான அரசியல் நகர்வு
ما لا يتم الواجب الا به فهو واجب
ஒரு கடமை நிலைநாட்டப் பட எதுவெல்லாம் தேவையான விடயங்களோ, அவை அனைத்தும் கடமையாகும் .பண்படாத சமுதாயத்தில் ஆட்சி இல்லை ஆட்சி அமைக்கும் சூழல் இல்லாத இடத்தில் ஆட்சி பற்றிய போதனை அவசியமில்லை ,அகீதா ரீதியாக பண்படாத சமுதாயத்தை சீர்திருத்தம் செய்த பின்புதான் கிலாபத்தின் அடைவு கிடைக்க பெரும் .எனவே ஒரு மாடி வீட்டுக்கு செல்வதற்கு படி ஏறுவது எப்படி அவசியமோ அதேபோன்றுதான் மக்கள் சீர்திருத்தம் அழுத்தமாக செய்யப்பட்டு அது அடையப்பட்ட பின்பு பண்பட்ட சமுதாய சூழலே கிலாபத்தை ஏற்படுத்த ஏதுவாக அமையும்.
ஒரு கடமை நிலைநாட்டப் பட எதுவெல்லாம் தேவையான விடயங்களோ, அவை அனைத்தும் கடமையாகும் .பண்படாத சமுதாயத்தில் ஆட்சி இல்லை ஆட்சி அமைக்கும் சூழல் இல்லாத இடத்தில் ஆட்சி பற்றிய போதனை அவசியமில்லை ,அகீதா ரீதியாக பண்படாத சமுதாயத்தை சீர்திருத்தம் செய்த பின்புதான் கிலாபத்தின் அடைவு கிடைக்க பெரும் .எனவே ஒரு மாடி வீட்டுக்கு செல்வதற்கு படி ஏறுவது எப்படி அவசியமோ அதேபோன்றுதான் மக்கள் சீர்திருத்தம் அழுத்தமாக செய்யப்பட்டு அது அடையப்பட்ட பின்பு பண்பட்ட சமுதாய சூழலே கிலாபத்தை ஏற்படுத்த ஏதுவாக அமையும்.
இஸ்லாமிய விழுமியங்கல் தெரியாமல் சீரழிந்து கிடக்கும் சமுதாயத்தை செவ்வனே செதுக்கி எடுப்பதன் மூலம் சந்தர்பத்தை அமைக்கலாம் ,கிலாபத்தை அடைவதற்கு முன் இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் ,எத்தனையோ நபிமார்கள் ,உலமாக்கள் தவ்ஹீதுக்கான தாவா பயனித்தில் மக்கள் சீர்திருத்த பணியைத்தான் தமது தலையாய கடமையாக செய்து வந்தார்கள் ,எனவே “அவ்லவியா” என்பது மக்கள் சீர்திருத்த பணிதான் என்பதில் சந்தேகமில்லை ,வீட்டுக்கு அவசரமாக போக வேண்டுமென்றால் படியில் அவசரமாக போக வேண்டும் ,கிலாபத் வேண்டுமென்றால் மக்கள் சீர்திருத்த பணி அவசரமாக நடைபெற வேண்டும் ,
மக்கள் மனமாற்றம் மூலமே அரசியல் மாற்றம்
மக்கள் சீர்திருத்த பனிக்குள் மக்களின் ஆன்மீக லவ்கீக விடயங்கள் அனைத்தும் உள்ளடங்கும் .
" நபியே உங்களை அகிலத்தாருக்கு அருளாக அனுப்பினேன்
என்று இறைவன் சொல்கிறான் அதன் விளக்கம் மக்களின் எல்லாவகையான சீர்திருத்த பணிக்கக்காவும்தான் என்று புரிந்து கொள்ள முடியும்.மக்கள் சீர்திருத்த பனிக்குள் இஸ்லாமிய தவ்ஹீத் கோட்பாட்டில் இருந்து பாதணி அணியும் வரை என்று புரிந்துகொண்டால் ஒருபகுதியை விட்டுவிட்டு மறுபகுதியை இஸ்லாம் சொன்னதாக பிழையாக புரிந்துகொள்ள இடம்பாடு இல்லை.
கிலாபா இன்றைய சமுதாயத்துக்கு கட்டாயம் என்று சொல்லும் தரப்பு கிலாபவை விட முக்கியமான அகீதா பிரச்சாரம் போன்றபனிகள் இருக்கின்றன அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு இன்றைய சூழலுக்கு பொருத்தம் இல்லாத அரசியல் பணியை முடுக்கி விட்டுள்ளனர் ,அல்லாஹ்வுடைய சட்டம் நிலைநாட்டபடுவது யார்மூலம் என்பதை இவர்களால் விளங்க முடியவில்லை,தீன் நிலைநாட்டபடுவதற்கு சீர்திருத்தம் அடையபெற்ற சமூதாயம்தவிர்க்க முடியாத ஒன்றாகும் ,அந்த சமுதாயம் இப்போது உள்ளதா என்ற கேள்விக்கு விடை எதிர்மறையாகவே இருக்கும் ?
இஸ்லாமிய அரசியலின் தலைமைத்துவம்
இஸ்லாமிய அரசியலின் தலைமைத்துவம்
யார் தீனை நிலை நிறுத்தும்பணியை செய்வது சன்னிகளா? ஷீயாக்களா? பெரலவிகளா? காதியாநிகளா?சமுதாயம் இஸ்லாமிய அடிப்படையை விளங்க வேண்டிய கட்டாய தேவையில் உள்ளது ,இஸ்லாத்தை சரிவர விளங்காத காரணத்தால் பலபிரிவுகளாக பிரிந்து உள்ளனர் ,அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை தெரியாமல் கிலாபத்தை போதித்து என்னபயன் இருக்கிறது?
தொழுகை இல்லாதவனிடம் கிலாபத்தை அமைக்க பாடுபடுவோம் வா என்று சொல்லமுடியுமா?இறைவனைபற்றிய அறிவு இல்லாதவனிடம் கிலாபத் பற்றிபேசி என்ன பயன்? ஈமான் என்றால் என்ன என்று தெரியாதவரிடம் கிலாபத் பேசி என்ன பயன் ?இன்றய அரபு நாடுகளிலும் இஸ்லாமிய நாடுகளிலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் மற்றும் ஹிஜாப் போன்ற விடயங்கள் நமது சமுதாய பேர்வளிகலாலேயே விமர்சிக்கபடுகிறது அவர்களிடம் சென்று கிலாபத் பேசி என்ன பயன் ?
முதலில் முஸ்லிம் சமுதாயத்தை திருத்தும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட வேண்டும்,சீர்திருத்தம் பெற்ற முஸ்லிம்கள்தான் ஆட்சியை தலைமை தாங்க தகுதி உள்ளவர்களும் அந்த அமானித்தை ஓரளவேனும் தாங்கி கொள்ள கூடியவர்ளாவர் .
தொடரும் ....
பகுதி 1 http://www.jaffnamuslim.com/2012/06/2-8-69000.html
கனமான கருத்துக்கள் கொண்ட ஒரு கட்டுரைத் தொடரை பிரசுரிக்கும் யாழ் முஸ்லிம் தளத்திற்கு நன்றிகள்.
ReplyDeleteகட்டுரை ஆசிரியர் அழகாக, ஆழமாக விடயங்களை அலசியுள்ளார்.
அத்திவாரமும், தூண்களும் இல்லாமல், கூரை போட முடியாது.
Inraya soolnilaiyil devaiyatra thalaiyankam
ReplyDeleteயூதர்களுக்கும், சியோநிச்டுகளுக்கும் தூய இஸ்லாமிய அடிப்படை பற்றிப் பேசினால், அவற்றைப் பின்பற்றினால் பிடிக்காது.
ReplyDeleteஏனெனில் அது ஷெய்த்தானின் பண்பு.
இஸ்லாம் என்ற பெயரில், மாசுக்களையும், மறுக்களையும் பின்பற்றிக் கொண்டு வரட்டுத் தத்துவம் பேசினால் அவர்களுக்கு மகிழ்ச்சி.
தூய இஸ்லாம் இன்றைய சூழ்நிலையில் பின்பற்றத்தகுதியற்றதா?
என்ன முட்டாள் தனமான கருத்து?
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யப் படைகளை விரட்டி அடித்துவிட்டு, இஸ்லாமிய அடிப்படை, அகீதா சரியாக அமையாத பல குழுக்கள் இணைந்து ''இஸ்லாமிய ஆட்சி'' என்ற ஒன்றை உருவாக்கினார்கள். முடிவு என்ன ஆனது? (தாலிபான்களைப் பற்றி பேசவில்லை) வேற்றுமையில் ஒற்றுமை கண்டதாக சொல்லிக் கொண்டவர்கள், ஹிக்மதயார் என்றும், ரப்பானி என்றும், மசூத் ஷா என்றும் பல குழுக்களாக பிரிந்துகொண்டு தமக்குள்ளேயே மோதிக்கொண்டு அழிந்தார்கள்.
காரணம் என்ன, அவர்களின் வார்ப்பு இஸ்லாமிய அகீதாவ்ன் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை.
இஸ்லாமிய அடிப்படைகளை விட்டு விட்டு இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கி விட முடியாது. அப்படி உருவாவது உண்மையான இஸ்லாமிய
ஆட்சியாக இருந்துவிடவும் போவதில்லை.
கட்டுரை ஆசிரியர் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. கட்டுரையை ஒழுங்காக வாசித்தால், இஸ்லாம் என்ன சொல்கின்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.
தமக்கென தனி மார்க்கம் உருவாக்கிக் கொண்டு, அதுதான் இஸ்லாம் என கற்பனை செய்துகொண்டு வாழ்பவர்களுக்கு இந்தக் கட்டுரை
கரைச்சலைக் கொடுக்கின்றது, அவர்கள் காகம் போல கரைகின்றனர்.
கட்டுரை ஆசிரியரோ, யாழ் முஸ்லிமோ தளர்ந்து விடத் தேவையில்லை.
கூலி மறுமையில் இருக்கும்.