இலங்கை சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69,000 - பெண்களே அதிகம்
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் 36,807 கிராமங்கள் உள்ளதோடு ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 123 குடும்பங்கள் வாழ்வதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன தெரிவித்தார்.
இந்த கணிப்பீட்டின்படி 14,022 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளதோடு 313 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன. மொத்த சனத்தொகையில் ஒரு கோடி 5,12,000 பெண்களும் ஒரு கோடி 3,57,000 ஆண்களும் உள்ளனர்.
குடிசன மதிப்பீட்டு பணிகள் 2012 பெப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெற்றது.
inth calculation pilaya poddirukkirinka penkal thkai oru kodi 5,12,000 aankal oru kodi 3,57,000 irandayum koodina moonru kodiku mela varuthu
ReplyDeleteraafi
இதில் முஸ்லிம்கள் எத்தனை பேர் மற்றும் மொத்த சனத்தொகையில் முஸ்லிம்களின் விகிதாசாரம் என்ன ? யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து இதில் பதிவேற்றுங்கள்.
ReplyDeleteஇஷாக் ரஹீம்
டோஹா கட்டார்
Raafi, அப்பிடி மூன்று கோடிக்கு மேலே வராது.
ReplyDeleteசந்தேகம் என்றால் நீங்களே ஒரு கால்குலேட்டரை எடுத்து கூட்டிப் பாருங்கள்.
அல்லது ஸ்கூலுக்கு போய் மறுபடியும் மூன்றாம் வகுப்பு கூட்டல் கழித்தல் படியுங்கள்.
நன்றி.