Header Ads



லெப்டொப் பாவிக்கும் ஆண்களின் கவனத்திற்கு..!


மடிக்கணனிகளில் வை-பை மூலம் இணையத்தினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு மடியில் வைத்து மடிக் கணனிகளைப் பாவிப்பதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. 

இக் கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ் ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் ஊடாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. 

வை-பை இல்லாமல் மடிக்கணனியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் வை-பையை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தவிர மடிக்கணனிகளின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை மடிக் கணனிகளை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.